அடக்கடவுளே… சந்தானம் நிலைமை படுமோசம்… அவருக்கு இப்படி ஒரு நிலமையா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட சந்தானம். நடிகர் சிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தின் மூலம் வெள்ளி திரையில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாலும் இருந்து வந்தது . அந்த வகையில் வெள்ளி திரையிலும் சந்தானத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து பிசியான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், அடுத்து ஹீரோவாக ஒரு சில படங்கள் நடித்தார், அதனைத் தொடர்ந்து நடித்த ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று காமெடி வேடங்களை உதரி தள்ளிவிட்டார். இந்நிலையில் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான குளு குளு திரைப்படதின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி 8.5 கோடிக்கு வாங்கியது.

குழு குழு படம் படு தோல்வி அடைத்துள்ளதால், சந்தானத்தின் மார்க்கெட் மிக பெரிய அளவில் சரிந்துள்ளது, இதனால் அவர் நடிக்கும் புதிய படத்தின் சேட்டிலைட் டிஜிட்டல் வாங்குவதற்கு எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் முன் வரவில்லை. மேலும் மிகக் குறைந்த தொகையான வெறும் இரண்டு கோடி ரூபாய்க்குத்தான் சேட்டிலைட் டிஜிட்டல் உரிமையை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானத்திற்கு மார்க்கெட் இல்லாததால் தற்போது நடித்து வரும் புதிய படம் வெளியானாலும் மிகப்பெரிய நஷ்டத்தை தான் சந்திக்கும் என்பதால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியன் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தாமல் பல காரியங்களைச் சொல்லி இழுத்தடித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சந்தானத்தின் புதிய படப்பிடிப்பும் பாதியிலே நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சந்தானத்தின் நிலை தற்பொழுது படு மோசமாக உள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.