பேராசையால் வந்த வினை… இழந்ததை மீட்க சந்தானம் எடுத்துள்ள புதிய யுக்தி…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சந்தானம் காமெடிக்கு என்று தனி இடமே உள்ளது. வடிவேல் மற்றும் விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள், தங்களுக்கு என்று நகைச்சுவைக்காக ஒரு டிராக்கை கொண்டு சென்றிருந்த பொழுது, தனக்கென்று ஒரு ட்ரெண்டை செட் செய்தவர் தான் சந்தானம். பெரிய ஹீரோக்களின் படம் கூட சந்தானம் காமெடியால் மட்டுமே ஓடியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வந்த அனைத்து படங்களிலும் சந்தானம் தான் தெரிந்தார். இளம் நடிகர்கள் அனைவரிடமும் சந்தானம் சேர்ந்து நடித்தார். அவர் காமெடி இல்லாத படமே இல்லை என்ற நிலைமை உருவானது. அந்த அளவிற்கு உச்சியில் இருந்தவர் தான் சந்தானம்.

தொடர்ந்து காமெடியில் பிஸி நடிகராக இருந்த சந்தானம், தன்னை போல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஹீரோவாக நடித்த பின்பு, தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற ஆசையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்தார், ஆரம்பத்தில் அவர் நடித்த இரண்டு படங்களுமே அவரின் காமெடியை மையமாக கொண்டு உருவாக்கியது. அது மிகப்பெரிய ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த சீரியஸ் படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. மக்கள் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களை அவர் சொந்தமாக தயாரித்த படங்கள் தான். ஆரம்பத்தில் சந்தானம் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்து நல்ல லாபத்தையும் பெற்று தந்தது.

ஆனால் அடுத்தடுத்து சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, அவருக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது, இதனால் கடன் வாங்கி படம் எடுக்கும் சூழலுக்கு தள்ள பட்ட சந்தானம் தயாரிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பெரும் கடனாளியானார் சந்தானம். இந்நிலையில் காமெடியனாக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க்க மறுத்து, நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வரும் சந்தானம் தொடர் தோல்வியை சந்தித்து இனி ஹீரோவாக சந்தானத்தை வைத்து இனி யாரும் படம் எடுக்க மாட்டர்கள் என்கிற ஒரு சூழல் அவருக்கு உருவாக்கி தந்தது.

இந்நிலையில் சந்தானம் காமெடி செய்யும் பொழுது அவரின் காமெடியால் தான் அந்த படம் ஓடியது என்று அனைவரும் சொல்ல முடிந்தது. ஆனால் அவர்‌ ஹீரோவாக மாறியபின் பெரிய அளவில் அவருக்கு எந்த படமும் ஓடவில்லை. ஆனால் அவருக்கென்று அவரின் காமெடிக்கென்று இன்னும் ரசிகர் கூட்டம் இருக்க தான் செய்கின்றது. சந்தானத்திற்கு பிறகு எவரும் அந்த அளவிற்கு காமெடி செய்யவில்லை என்ற இடத்தையும் அவர் பிடித்து விட்டார்.

அவர் பிறகு எந்த காமெடி நடிகரும் அந்த அளவிற்கு பிரகாசிக்கவில்லை. அவருக்கான இடம் இன்னமும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது. இதனை உணர்ந்த சந்தானம் மீண்டும் தான் காமெடியனாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, சமீபத்தில் அவருடைய டிடி ரிட்டன்ஸ் பட ப்ரமோஷன் விழாவில் பேசிய போது, தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவில் இருக்கும் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானமும் ஹீரோவாக நடிக்க உள்ளனர். இதை தொடர்ந்து இவர் காமெடியனாக நடிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
சந்தானத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பவர் ராஜேஷ். மீண்டும் அவர் மூலம் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒரு ரவுண்டு வருவார் என்றும், மேலும் சந்தானம் காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளது, இதுவரை சரியான காமெடி நடிகர் கிடைக்கும் அல்லோல் பட்டு வந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது .