சமுத்திரக்கனியோடு கீப்பு தான் சிம்ரன்… பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படத்தின் திரை விமர்சனம்…

0
Follow on Google News

ராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த ‘அந்தாதூன்’ திரைப்படம், 2018-ஆம் ஆண்டில் வெளியானது. ஆகாஷ் ஷராஃப் மற்றும் சிமி ஆகிய இரண்டு முக்கியப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தியில் ‘அந்தாதூன்’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது.

இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்வதற்கான உரிமையை 2019-இல் நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கினார். ஆரம்பத்தில் வேறு இயக்குநர்கள் இதனை இயக்குவதாக இருந்தது. பிறகு, படத்தை தியாகராஜனே இயக்க முடிவுசெய்தார். அந்த வகையில் அவரின் இயக்கத்தில் மற்றும் பல வருடங்களுக்குப் பிறகு டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழில் நடித்து வெளியாகி இருக்கும் படம் தான் ‘அந்தணன்’. இப்படத்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்திருக்கிறார்.

மேலும் படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
கதையில் நடிகர் பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர். இவர் மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவும், பணம் சம்பாதிக்கவும், தான் ஒரு பார்வையற்ற இசை கலைஞர் என உருமாறி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரின் திறமையை பார்த்த நடிகர் கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்ய தனது வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால், அங்கு பிரசாந்த் சென்று பார்க்கும் போது, அங்கு கார்த்திக்கின் மனைவி சிம்ரன் அவரைக் கொன்று விட்டு, வேறு ஒருவரான சமுத்திரக்கனியிடம் உல்லாசமாக இருக்கிறார். அதைப் பார்த்த பிரசாந்த் அதிர்ச்சி அடைகிறார்.

பின் கார்த்திக்கின் மனைவி சிம்ரனுக்கு, பிரசாத் பார்வை இல்லாதவர் போல் ஊரை ஏமாற்றுகிறார் என தெரிய வருகிறது. அதற்குப் பிறகு நடக்கும் சுவாரஸ்யம் தான் மீதிக்கதை. இந்த படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்தை திரையில் பார்ப்பது உண்மையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கம்பேக் கம்பேக்னு சொல்லுவார்கள், ஆனால் கம்பேக் திரைப்படமாக இருக்காது.

ராமராஜனின் சாமானியன், மோகனின் ஹரா போன்ற படங்கள் இப்படி சொல்லியே வீணாப்போனது. ஆனால், பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் உண்மையிலேயே அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. கண்ணை மூடிக்கொண்டு பார்வையில்லாதவராக நடித்து விடலாம். இந்த படத்தில், கண்களை திறந்து கொண்டே பார்வையற்றவராக நடித்திருக்கிறார்.

இது பாராட்ட வேண்டிய விஷயம், சமுத்திரகனியை இதுவரைக்கும் நாம் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என பல கேரக்டர்களின் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த படத்தில் மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி சிம்ரனின் சின்ன வீடாக வைத்து இருக்கிறார். இந்த விஷயம் யாருக்கு தெரியும் என்பதுதான் படத்தின் கதை ஓட்டம் சொல்கிறது.

இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என்று சிம்ரனை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார் யோகி பாபு. அதேபோல, வனிதாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனது, கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் வனிதாவும் நடித்து அசத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

விஜய் சேதுபதி, அனிருத் பாடிய பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. பிரசாந்தின் டான்ஸ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு படத்தின் கடைசியில் ஒரு பாட்டை போட்டு குஷிப்படுத்தி விட்டார் இயக்குனர். நீண்ட நாட்களுக்கு பின்னர், திரையில் வந்து ஒரு அட்டகாசமான கம்பேக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் பிரசாந்த் என படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.