பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,பொதுவாக திரைப்படத்தை அநாகரிகமாக விமர்சனம் செய்யக்கூடிய நபர். இவர் எப்பொழுதுமே, படத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை தவிர்த்து, குறைகளை மட்டும் எடுத்து அந்த படத்தை கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்ய கூடிய நபர், அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை அநாகரிகமாக நடிகர் அஜித்தை தனிப்பட்ட முறையில் கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
இதற்கு சினிமா துறையை சேர்ந்த பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர், இருந்தும் ப்ளூ சட்டை மாறன் தனக்கு கண்டனம் தெரிவிப்பவர்களையும் கேலி , கிண்டல் செய்து வந்தார், இந்த நிலையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், படத்தை பார்த்து எத்தனையோ பேர் மிகவும் நாகரிகமாக விமர்சனம் செய்கின்றனர். அதைத்தாண்டி ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்து அதன் மூலம் சம்பாதிப்பது முற்றிலும் தவறு.
அஜித்தை உருவ கேலி செய்வதற்கு நீ யார்.? நீ என்ன அவ்ளோ பெரிய வெண்ணையா.? ஒரு படம் எடுப்பது ஒன்னும் எளிதான காரியமில்லை. அதில் பலருடைய உழைப்பு அடங்கியிருக்கின்றது. அப்படி கஷ்டப்பட்டு எடுக்கும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் மோசமாக பேசி கெடுத்து விடுகின்றீர்கள் என ஆவேசமாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை கண்டிக்கும் வகையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியதை அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி வரவேற்றனர்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததாவது, நீங்க தரமான படம் எடுத்தா ஏன் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யப் போறாங்க நீங்க மட்டும் தரம் தாழ்ந்து படம் எடுக்கலாம் ஆனால் விமர்சனம் மட்டும் தரமா இருக்கணுமா.? சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும். சார்பட்டா, மண்டேலா, ஜெய்பீம் மாதிரி தரமான படங்கள் வந்தா தரமான விமர்சனம் வரும். இவங்க மொக்கை படங்கள் எடுப்பங்களாம். ஆனா விமர்சனம் மட்டும் ‘அட்டகாசம். பிளாக் பஸ்டர்’னு இருக்கனுமாம். என்றா இது ஞாயம்?
புலிக்குத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கழட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய ‘வெண்ண’ சுரேஷ் அவர்களே. இதுபோன்ற கேவலமான சீன்களில் நடிக்காமல் நாகரீகம் காக்க வேண்டும்.
மற்றவர்களின் அருகதை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை என நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடுமையாக பேசியதற்கு வழக்கம் போல் தனது பாணியில், கேலி,கிண்டல்களுடன் பதிலளித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடதக்கது.