தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அவள் வருவாளா என்ற படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடினார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு இல்லாததால் சொந்த தொழிலை கவனித்து வந்தார். அப்போது, கல்லூரி காலத்து நண்பரான நெல்சன் சிம்புவை இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பாதியில் நின்று போனது.
இதையடுத்து, மீண்டும் தனது நண்பன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அந்த படம் ரெடின்க்கு சினிமாவில் நல்ல பெயரைப்பெற்றுத்தந்தது. பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நீண்ட நாட்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்ந்து தெரிவித்தனர்.
அதேசமயம் கூடவே ஒரு விஷயமும் வைரலானது. அதாவது ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்த சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணமாம். சங்கீதா ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் இவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்கு போய்விட்டார்கள். விவாகரத்து நடந்த நிலையில் சங்கீதா அவருடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் அரண்மனைக்கிளி மற்றும் திருமகள் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஆனந்த ராகம் சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தான் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் ஜோடியாக தற்போது மைசூருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே சங்கீதா அவருடைய பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் என்னுடைய மறக்க முடியாத நாள் ஏராளமானோரின் வாழ்த்துக்களுடனும், ஆனந்த கண்ணீருடனும் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு அச்சு அசலாக அம்மாவை போல் முகபாவனையுடன் இருக்கிறது. அந்த வகையில் இவ்வளவு பெரிய மகளுக்கு அம்மாவாக இருக்கும் சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்ற விஷயம் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தில் ஆளாக்கி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது தான் சங்கீதாவின் மகளா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
எனினும் உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை. எனவே இதற்கான பதிலை சங்கீதா அளித்தால் மட்டும்தான் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். மேலும் சங்கீதா மகளின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ மனம் ஒத்து போனதால் கல்யாண வாழ்க்கையில் ஒன்று கூடி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சில படக் குழுவினர் மற்றும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் பல்வேறு சினிமா பரவாலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.