தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் இந்திய அளவில் முக்கியமான நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த். சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் ரஜினிகாந்த், மறைந்த புரட்சி தலைவர் எம் ஜி ஆர் க்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், 1996 தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது தேர்தல் வாய்ஸ். அந்த அளவுக்கு தமிழக மக்கள் ரஜினிகாந்தை கொண்டாடினர்.
தொடர்ந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரின் செயல்கள் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. மனைவி லதா நடத்தும் ஆசிரம பள்ளிக்கு வாடகை தராமல், அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று ரஜினிகாந்த்க்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. அசிங்கப்பட்டு, அவமானப்பட்ட பின்பு வேறு வழியின்றி வாடகை பாக்கியை கட்டினார் லதா. மேலும் அந்த பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று காலத்தால் சம்பளம் கொடுக்காது பிரச்சனையாக உருவெடுத்தது.
கொரோனா தொற்று காலத்தில் பள்ளி மூடியுள்ளதால் சம்பளம் கிடையாது என லதா தெரிவிக்க. அந்த பள்ளியில் வேலை செய்து வந்த ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், அவர் மனைவி நடத்தும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ஒரு வருடத்துக்கு சில லட்சங்கள் தான் ஆகும், ஆனால் அதை கொடுக்க கூட லதாவுக்கு மனம் இல்லை என்கிற குற்றசாட்டு அப்போது எழுந்தது.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு உடல் நல குறைவால் தீடிரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். தலைவருக்கு என்ன ஆச்சு என தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் பிராத்தனையில் ஈடுபட்டனர். தமிழக மக்கள் எந்த அளவுக்கு ரஜினியை தலையில் வைத்து கொண்டாடினார்கள் தமிழக மக்கள்.
சிங்கப்பூரில் ரஜினிகாந்துக்கு கிட்னி மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது, அப்போது ரஜினிக்கு கிட்னி தனமாக கொடுத்தவர் சஞ்சய் என்கிற நபர். சஞ்சய் தானமாக கொடுத்த கிட்னி ரஜினிகாந்தை மீண்டும் மறு அவதாரம் எடுக்க வைத்து சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பியது. இதன் பின்பு ரஜினி குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழகிய சஞ்சய், போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.மேலும் சில நேரங்களில் ரஜினி வீட்டிலே தங்கி உள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்துக்கு கிட்னியை தானமாக கொடுத்து மறுவாழ்வு கொடுத்த சஞ்சய் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரால் வெளியேற்ற பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினிக்கு கிட்னி தானமாக கொடுத்தவரை நன்றி உணர்வு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்ற ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு எப்படி மனம் வந்தது என வருத்தப்படுகிறது சினிமா வட்டாரங்கள்.