காற்றில் பறந்தது நடிகர் ரஜினிகாந்த் மானம்… அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்க்கு ஏற்பட்ட தலைகுனிவு…

0
Follow on Google News

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் அனைத்து மாநில சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய ஒரு நடிகர் ரஜினிகாந்த். கடல் கடந்து ரஜினி நடித்த முத்து படம் ஜப்பானில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மொழியே தெரியாத ஜப்பானிலும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உண்டு. இப்படி உலகம் போற்றக்கூடிய ஒரு நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றாலே அந்த நிகழ்ச்சி மாஸ் தான்.

ரஜினிகாந்த் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்றால், மின்னல் வேகத்தில் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து விடுவார். அதே போன்று நடிகர் ரஜினிகாந்த், மூத்த நடிகர் சூப்பர் ஸ்டார், இதையெல்லாம் தாண்டி, இந்த சமூகத்தில் ஒரு போற்ற தக்க மனிதனராக இருந்த வருகிறார், ஒரு காலத்தில் தமிழக அரசியலில் ஆட்சியை மாற்றும் அளவுக்கு அவருடைய அரசியல் வாய்ஸ் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால், குறிப்பாக அவருடைய சக நடிகரான கமல்ஹாசன் கூட, மேடையில் டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என அங்கிருப்பவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார், ஆனால் ரஜினிகாந்த், அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டார், பெரிய மனுஷன் தன்மைக்கு மேடையில் அறிவுப்பூர்வமாக பேசிவிட்டு கடந்து சென்று விடுவார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் மேடை பேச்சில் ஒரு ஆன்மீகம் கலந்த ஒரு அரசியலும் இருக்கும் அந்த வகையில், மேலும் ரஜினிகாந்த் பேசும் பேச்சில் பல அர்த்தம் ஒளிந்து இருக்கும், அது மட்டுமின்றி ரஜினிகாந்த் மைக்கை பிடித்தால் அது தலைப்பு செய்தி தான் அந்த அளவுக்கு சினிமாவை தாண்டி கொண்டாட கூடிய நடிகரக இருந்து வரும் ரஜினிகாந்த் சமீபத்தில் கலந்து கொண்ட அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினிகாந்துக்கு இந்த அவமானம் தேவை தானா.? என்கிற அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரையுலக சார்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்ட அம்பானி வீட்டின் திருமண விழா கொலகாலமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தால் அன்பால் வந்து ஆசீர்வாதம் செய்வது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அம்பானி இல்ல திருமண விழாவிற்கு மல்யுத்த வீரர் ஜான்சீனா முதல், பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான், சல்மான்கான் கிரிக்கெட் பிரபலங்கள் ரஜினிகாந்த் என திரளாக கலந்து கொண்டதன் பின்னணியில் இவர்களுக்கு எல்லாம் அம்பானி தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தான் முக்கிய பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அம்பானி வீடு திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மட்டும் செல்லாமல் அங்கே பாடல் பாடுவது நடனம் ஆடுவது என கொடுத்த பணத்திற்கு தங்கள் பெர்பார்மன்சை பிரபலங்கள் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு நடனம் ஒன்றை ஆடி மிகப் பெரிய அவமானத்தை பெற்றுள்ளார். பொதுவாக ரஜினிகாந்த் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என்றாலும் அம்பானி குடும்பத்தினர் கொடுத்த பணத்திற்கு ரஜினிகாந்த் அங்கே நடனம் ஆடியது மிகப்பெரிய கேலி கிண்டலுக்கு உள்ளாகி ரஜினிகாந்த் ரசிகர்களை அய்யோ தலைவா உங்க மரியாதை நீங்களே கெடுத்துகிறீர்களே என்று புலம்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் அம்பானி குடும்பத்தினர் கொடுத்த பணத்திற்காக ரஜினிகாந்த் தன்னுடைய தன்மானத்தை இழந்து தரம் தாழ்ந்து அங்கே நடனமாடியது அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகி உள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.