தனுஷின் வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் எப்படி காரணமாக இருந்தாரோ, அதேபோல் தான் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் இனி தனுஷ் படத்தில் நடிக்க கூடாது என்று ரெட் கார்டு வழங்கியதற்கும் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் தான் காரணம் என்ற பகிர் தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த இவர்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதோடு கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.
தனுஷின் இந்த முடிவு தான் தற்போது இவருக்கு பிரச்சனையாக எழுந்துள்ளது. முதலில் தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்பு, சூப்பர் ஸ்டார் மகளை கரெக்ட் செய்து, நிறைய படங்களில், சூப்பர் ஸ்டாரை வைத்தே வாய்ப்பு வாங்கி, பெரிய ஹீரோவான பிறகு, இன்று பெயரும் புகழும் வந்ததும் தனுஷ், ரஜினிகாந்தின் மகளை கழற்றி விட்டு விட்டார் என பலரும் விமர்சித்து வந்தனர்.
அதோடு தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்ட ஆரம்பித்தபோது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பணம் பற்றாத போதெல்லாம் தந்தையிடம் பணம் வாங்கி உதவி செய்து கொண்டிருந்திருக்கிறார். ஆனால் திடீரென இவர்கள் விவாகரத்து செய்தவுடன், ஐஸ்வர்யா பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதால், தனுஷ் மிகுந்த பண நெருக்கடி காரணமாக, சில சினிமா நிறுவனங்களிடமும், தயாரிப்பாளர்களிடமும், நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன், அதோடு மொத்தமாக, மூன்று, நான்கு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறேன் எனக் கூறி, எனக்கு ஒரு தொகையை அட்வான்ஸ் ஆக கொடுங்கள், நான் சேர்த்து கொடுத்து விடுகிறேன் என நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார்.
அப்போது அந்த தயாரிப்பு நிறுவனங்களும், நடிகர் தனுஷ் பெரிய ஹீரோ என்பதால், அவரை வைத்து படம் எடுத்தால் நல்ல ரீச் கிடைக்கும் என நம்பி பெரும் தொகையை தனுசுக்கு அட்வான்ஸாக கடன் வாங்கி கொடுத்திருந்திருக்கின்றனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக ஐந்து படத்திற்கு நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை வாங்கியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அவர்களின் படத்தில் நடித்து கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல், இவர் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியுள்ளது. இதனால் நடிகர் தனுஷ், இதுவரை அட்வான்ஸ் வாங்கி இன்னும் நடித்துக் கொடுக்காத படங்களில் எல்லாம், முதலில் நடித்த முடித்த பிறகுதான், புது படங்களில் நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதுவரை தனுஷ் வேறு எந்த படங்களிலும் புதிதாக கமிட்டாக கூடாது என்றும், அதேபோல் யாராவது தனுசை வைத்து படம் இயக்க நினைத்தாலும் முதலில் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசித்த பிறகு தான் இயக்க வேண்டும் என்றும், தனுஷ் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில் தான் தயாரிப்பாளர்கள் தனுசுக்கு எதிராக நிற்பதற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் மகள் விவாகரத்துக்கு பிறகு தனுஷின் மாமனார் மற்றும் மாமியார் தனுஷ் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், தயாரிப்பாளர்கள் ரஜினி குடும்பத்தினரிடம் வந்து இது பற்றி பேசும்போது, எனக்கு ஒன்றும் தெரியாது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து கொள்ளுங்கள் என கை விரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை ரஜினிகாந்த் குடும்பத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தால் தனுசுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது. ஆனால் ரஜினி, தனுஷ் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியதால் தான் இன்று தனுஷ் சிக்கலில் சிக்கியிருக்கிறார். இதனால் தான் தற்போது தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ரெட் கார்டும் வழங்கியிருக்கின்றன என்கிறது சினிமா வட்டாரங்கள்.