ரஜினிகாந்த் மானம் மரியாதை எல்லாம் போச்சு…. இது தமிழனுக்கும் ஏற்பட்ட தலைகுனிவு…

0
Follow on Google News

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம் என்றே சொல்லலாம். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரும்பு பெண்மணி என்று இந்திய அரசியலில் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவை தமிழக மக்கள் பெயர் சொல்லி கூட கூப்பிடாமல் அம்மா என்று உள் அன்போடு அழைத்து மரியாதை கொடுத்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு முறை முதலமைச்சராக சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்து மிகப் பெரிய ஆளுமையாக திகழ்ந்தாலும். அவர் நடிகையாக இருக்கும் போது, அதாவது நடிகர் ஜெயலலிதா தன்னுடைய சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிகையாக இருந்த பொழுது, தமிழக அரசியலில் முக்கிய தலைவராக இருந்த மூப்பனார் வீட்டின் விசேஷத்தில் ஒரு நடனம் ஆடியிருப்பார்.

ஆனால் ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையாக சுமார் பல வருடங்கள் கடந்து ஒரு இரும்பு பெண்மணியாக வலம் வந்த போது, பலரும் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி, அம்மா என்று கொண்டாடினாலும் ஒரு சில தரப்பினர், இவர் என்ன மூப்பனார் வீட்டில் விசேஷத்தில் நடனமாடியவர் தானே என்று இளக்காரமாக விமர்சனம் செய்தனர்.

மூப்பனார் வீட்டில் விசேஷத்தில் நடனம் ஆடினாலும் கூட ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையாக ஆன பின்பு அரசியலில் மூப்பனாரே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் சூழல் உருவானது. இருந்தாலும் ஒரு சிலர் மூப்பனார் வீட்டில் நடனமாடிய ஜெயலலிதாவுடன் மூப்பனார் தேர்தலில் கூட்டணி வைக்கும் நிலை உருவாகியுள்ளது என்கின்ற விமர்சனத்தையும் வைத்தார்கள்.

அப்படித்தான் நாம் செய்யக்கூடிய ஒரு சில செயல் எக்காலத்திலும் மறையாத ஒன்றாக இருக்கும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தை உலகக் கோடீஸ்வரரின் ஒருத்தரான அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு சென்றவர், ஒரு பெரிய மனிதன் தன்மைக்கு ரஜினிகாந்த் அந்த திருமண நிகழ்விற்கு சென்று எப்படி கபாலி படத்தில், ஆமாடா நான் கால் மேல் கால் போட்டு அப்படித்தான் உட்காருவேன் என்று வசனம் பேசினாரோ.

அதேபோன்று கெத்தா சும்மா மாஷா அம்பானி வீட்டில் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்து ரசித்து விட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றிருக்க வேண்டும் என்பதே ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களின் ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இதற்கு எதிர் மாறாக தமிழ்நாட்டின் அடையாளமாக வெளிமாநிலத்தவரால் பார்க்கக் கூடிய ரஜினிகாந்த் அம்பானி வீட்டில் நடனம் ஆனியது மிகப்பெரிய விமர்சனம் ஆகிவிட்டது.

காரணம் எதிர் காலத்தில் ரஜினியின் வாரிசு ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்து உலக கோடீஸ்வரர் ஆன அம்பானியின் வாரிசுகளுக்கு போட்டியாக தொழில் சாம்ராஜ்யத்தில் கோளாச்சும் போது. எப்படி ஜெயலலிதா மூப்பனார் வீட்டில் நடனமாடியது விமர்சனத்திற்கு உள்ளானதோ. அதேபோன்று ரஜினியின் வாரிசுகளை பார்த்து இவர் தாத்தா எங்கள் வீட்டில் வந்து நடனமாடியவர் தானே என்கின்ற விமர்சனம் நிச்சயம் வரும் என்கின்றனர்.

மேலும் ரஜினிகாந்தை சிவாஜி ராவாக அம்பானி அழைக்கவில்லை, ஒரு தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆக உலகம் கொண்டாட கூடிய சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருப்பதால்தான் அம்பானி திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்படி உலக சூப்பர் ஸ்டார் ஆக ரஜினிகாந்த் அங்கீகாரம் கொடுத்தது தமிழக மக்கள் ஆனால் தமிழக மக்கள் கொண்டாடிய ரஜினிகாந்த் அம்பானி வீட்டில் நடனம் ஆடியது காற்றில் பறந்தது ரஜினிகாந்த் குடும்ப மானம் மட்டுமல்ல தமிழர்களின் மானம் தான் என வேதனை அடைகிறார்கள் தமிழர்கள்.