கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் இருவரும் தங்கி இருந்த நிலையில் அங்கிருந்து தனித்தனியாக தாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிக்கை ஒன்றை அவர்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரிவதாக உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தைகள் நலன் கருதி இவர்கள் இருவரும் இணைவார்கள்.
இரண்டு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது, அதே நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு அவருடைய குழந்தை பள்ளி விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து விட்டார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது.

ஆனால் அதெல்லாம் உண்மையான தகவல் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழங்க கோரி வழக்கு தொடுத்தனர். இருவரும் தங்களுடைய விவகாரத்தில் இவர்கள் இருவரும் உறுதியாக இருந்த காரணத்தினால் சமீபத்தில் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இந்நிலையில் தனுஷிடம் இருந்து ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றதே அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தான் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், விரைவில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என ஒரு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் குறித்து பேட்டி ஒன்று பேசியது மிக பெரிய பரபரப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது தனுசை விட்டு பிரிந்த நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா காதலில் இருந்து வருவதாக தெரிவித்த பயில்வான் ரங்கநாதன், இந்த காதல் குறித்து அவருடைய தாயார் லதா ரஜினிகாந்த் கவனத்திற்கு சென்றதாகவும், ஆனால் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா தாயார் லதா ரஜினிகாந்த், ஏற்கனவே உன் நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக நீ காதலித்த நடிகர் தனுசை திருமணம் செய்து, அந்த வாழ்க்கை முழுமை அடையாமல் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
மீண்டும் இரண்டாவதாக உன்னுடைய காதல் திருமணத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் லதா தெரிவித்ததாக பேசிய பயில்வான் ரங்கநாதன். மேலும் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவிடம் உனக்கு துணை வேண்டும் என நீ நினைத்தால், உனக்கு மாப்பிள்ளையை நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்ததாகவும்.
மேலும் இரண்டாவது காதல் திருமணத்திற்கு எங்களால் அனுமதிக்கவே முடியாது, நீ ஏற்கனவே காதலித்து திருமணம் செய்த முடிவு சரி இல்லாமல் அமைந்து விட்டது, மேலும் தற்பொழுது உனக்கு வாலிப வயதில் இரண்டு மகன்கள் இருப்பதால் உனக்கு திருமணம் சரிவராது என்று லதா ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை தெரிவித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே மீண்டும் தனுஷ் வேறு ஒரு பெண்ணையும், ஐஸ்வர்யா வேறு ஒரு நபரையும் திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், இருவரும் அவர்களுக்குள் தனி சுதந்திரம் வேண்டும் என்பதற்காக தான் விவாகரத்து பெற்று பிரிய வேண்டும் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது.