ரஜினிகாந்த் போடும் கண்டிஷன்… கால் சீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்கள் ஓட்டம்…

0
Follow on Google News

2021-ல் வெளியான ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் ஜெயிலர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஜெயிலர் படத்தின் மூலம் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயலிர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன் லால் ஆகியோர் கேமியோவாக நடித்திருந்தனர். அனிருத்தின் மிரட்டலான இசை படத்தின் பலமாக அமைந்தது.

கடந்த மாதம் 10-ம் தேதி ஜெயிலர் படம் வெளியான 10 நாட்களிலேயே ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் மொத்தம் ரூ 600 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தே லாபத்தில் இருந்து ரூ. 100 கோடியை ரஜினியிடம் கொடுத்தது சன் பிக்சர்ஸ். ஜெயிலருக்காக ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 110 கோடி. ஆக ஜெயிலருக்காக ரஜினிக்கு ரூ. 210 கோடி கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரூ. 210 கோடியோடு நின்றுவிடவில்லை. ரூ. 1.51 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 காரை ரஜினிக்கு பரிசளித்துள்ளார் கலாநிதிமாறன். இந்த ரூ. 210 கோடி மூலம் ஷாருக்கான், பிரபாஸை சம்பள விஷயத்தில் முந்திவிட்டார் ரஜினி.

ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். அதனால் தலைவருக்காக ஸ்பெஷலாக இசையமைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜெயிலர் பட வெற்றியால் அனைவர் கவனமும் ஞானவேல் பக்கம் திரும்பியிருக்கிறது. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகவிருக்கிறது. மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தை அடுத்து தலைவர் 170 படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. ஜெய்பீம் போன்றே தலைவர் 170 படமும் அனைவரையும் கவரும் என்று நம்பப்படுகிறது. தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ரஜினி என முன்பு தகவல் வெளியானது.

ஆனால் நடிப்புக்கு முழுக்கு போட ரஜினி முடிவு செய்யவில்லை. ஞானவேல் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். அதன் பிறகும் படங்களில் நடிப்பார். தலைவர் 171 படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சம்பளத்தை பற்றி பேச வந்த தலைவர் 170 தயாரிப்பு நிறுவனத்திடம் அதிக சம்பளம் கேட்டுள்ளாராம். ரஜினியின் அதிரடியான சம்பளத்தை கேட்டு தயாரிப்பு நிறுவனம் மிரண்டு போனதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, அதுமட்டுமின்றி இது வெறும் வதந்தி என்று கோலிவுட் சினிமா வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர்.