நீங்கள் என் நண்பர்.. ஆனால்… கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் போட்ட கண்டிஷன்..

0
Follow on Google News

கமல்ஹாசன் நடித்து தயாரித்த விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு கமல்ஹாசன் மிக பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து வந்தார். அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு தீடிரென நடந்துள்ளது. அப்போது தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ்ல் ரஜினிகாந்த் கால் சீட் கொடுத்தால் தன்னுடைய பொருளாதார சிக்கல் நீங்கும் என ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்டு கொண்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் இண்டெர்னஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டுள்ளார் கமல்ஹாசன், முதலில் ஒப்பு கொண்ட ரஜினிகாந்த், பின்பு கமல்ஹாசன் உடன் இணைந்து மகேந்திரன் தயாரிப்பதை அறிந்து, நீங்க என் நண்பர் உங்களுக்கு கால் சீட் கொடுக்கிறேன். ஆனால் மகேந்திரன் இடையில் வருவது எனக்கு விருப்பம் இல்லை என கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க ரஜினிகாந்த் பின்வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு கடும் பொருளாதாரச் சிக்கலில் இருந்த கமலஹாசன், விக்ரம் படம் வெளியான பின்பு அவருடைய நிலை தலைகீழாக மாறியது. பல கோடிகளை அள்ளி கொடுத்த விக்ரம் திரைப்படம் கமலஹாசனை பல திரைப்படங்கள் தயாரிப்பதற்கு வழிவகை செய்தது. அந்த வகையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தை தயாரிப்பதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் கலந்து முட்டி மோதி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்சில் ரஜினிகாந்த் நடித்த மறுப்பு தெரிவித்துருந்த நிலையில் மீண்டும் அதே ராஜ்கமல் ஃபிலிம்சில் மகேந்திரன் கமலஹாசனின் பாட்னராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் ராஜ்கமல் பிலிம்ஸ்ல் நடிப்பாரா என்கிற சந்தேகம் வந்துள்ளது.