மகிழ்ச்சியில் லதா ரஜினிகாந்த்… ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு வந்த அவருடைய படங்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பீக் நடிகராக வலம் வருகிறார், குறிப்பாக இயக்குனர் நடிகர் என இரண்டுலமே ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தனுஷ். ஆனால் தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்த பின்பு இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்தவர், குறிப்பாக தன்னுடைய தந்தையை வைத்து அவர் இயக்கிய லால் சலாம் படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் வாழ்க்கையும் போச்சு, தொழிலும் போச்சு தொட்டதெல்லாம் ஏதும் சரிவர மாட்டேங்குது என்கின்ற நிலையில்தான் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இருதய பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவருக்கு எந்த ஒரு மன கஷ்டமும் மன உளைச்சலும் மீண்டும் வரக்கூடாது.

அப்படி வந்தால் அவருக்கு இதயத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று ரஜினிகாந்த் குடும்பத்தாருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும் மீண்டும் இணைய வேண்டும் அதுதான் என்னுடைய மனதிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவும் அவர்களுக்குள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இரண்டு தரப்பிலையும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் முதல் விசாரணைக்கு இருவருமே ஆஜராகவில்லை, இரண்டாவது விசாரணைக்கும் ஆஜராகவில்லை, மூன்றாவது விசாரணைக்கும் ஐஸ்வர்யா – தனுஷ் இரண்டு தரப்பிலும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பேசி மீண்டும் இணைந்து விடலாம் என்கின்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்த தடவை இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் கணவன் மனைவி இருவரும் சமரசமாகி மீண்டும் இணைய இருப்பதாக மனு தாக்கல் செய்த பின்பு இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.

இதன் பின்பு எப்படி நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரே நேரத்தில் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு நாங்கள் இருவரும் ஒருமனதாக இருக்கிறோம் என்று தங்கள் பிரிவை உறுதி செய்தார்களோ.! அதே போன்று இருவரும் மீண்டும் ஒருமனதாக இணைகிறோம் என்கின்ற அறிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் அந்த அறிக்கை இருவரும் தனித்தனியாக வெளியிடுவதா வெளியிட்டு தங்களுடைய இணைப்பை உறுதி செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய சந்தோசத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. இதனை தொடர்ந்து தன்னுடைய மனைவி லதாவிடம் எனக்கு இனி எந்த கவலையும் இல்லை அடுத்தடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று சொன்னதும் லதாவுக்கு அதைவிட மிகப்பெரிய சந்தோசம், காரணம் கணவர் அடுத்தடுத்து சினிமாவில் நடித்தால் இன்னும் பல கோடி காசு சேரும் என்பது தான் லதா விற்கும் சந்தோசம்.

இப்படி விஜயும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் நடிகர் ரஜினியிடம் போட்டி போட்டு பெரும் நிறுவனங்கள் கால் சீட் கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து விட்டார்கள், இது உங்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.