தனுஷ் தாய் – தந்தையை அவமானப்படுத்திய லதா ரஜினிகாந்த்.. சவால் விடுத்து தரமான சம்பவம் செய்த தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய மாமனார் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில், அந்த ஏரியாவில் இதுவரை யாரும் இதுபோன்று பிரம்மாண்டமாக கட்டப்படாத வகையில் மிகப்பெரிய பங்களா வீட்டை கட்டிய தனுஷ் சமீபத்தில் தான் தன்னுடைய தாய் தந்தையுடன் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வை நடத்தி முடித்தார்.

150 கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தனுஷ் வீட்டின் உள்ளேயே ஸ்விம்மிங், உடற்பயிற்சி செய்வதற்கான ஜிம், மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு கிரிக்கெட் பிச் போன்ற பல வசதிகளை உள்ளடக்கி இந்த வீட்டை கட்டி முடித்துள்ள தனுஷ், அவருடைய மாமனார் வீட்டின் அருகிலேயே மிக பிரம்மாண்டமாக, குறிப்பாக அந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய பங்களா என்று சொல்லக்கூடிய வகையில் காட்டியுள்ளது பின்னணி குறித்த தகவல் வெளியகியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் சம்பந்தியான கஸ்தூரி ராஜா, ஒரு எளிமையான குடும்பத்தைச் சார்ந்தவர், தன்னுடைய குழந்தைகளின் தேவை ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்வதற்கு கூட கடுமையாக போராடியே அதை நிறைவேற்றும் வகையில் தான் கஸ்தூரி ராஜாவின் குடும்ப பொருளாதாரம் இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் ரஜினி மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்ட பின்பு ரஜினிகாந்தின் சம்பந்தியான தனுஷ் தாய் – தந்தைக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உட்பட்ட அவருடைய குடும்பத்தினர் யாரும் கொடுக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்துள்ள அஸ்வின் வீட்டாருக்கு மிக பெரிய மரியாதையை கொடுத்து வந்துள்ளார் லதா ரஜினிகாந்த் உட்பட அவருடைய குடும்பத்தினர்.

இதற்கு காரணம் அஸ்வின் குடும்பத்தினர் மிக பெரிய தொழில் அதிபர்கள் என்பதால் பொருளாதார ரீதியில் தங்களுடை ஸ்டேடஸ்க்கு சமமானவர்கள் என்கிற கண்ணோட்டத்தில் ஒரு சம்பந்திக்கு தேவையான உரிய மரியாதையை லதா ரஜினிகாந்த் கொடுத்து வந்துள்ளார், ஆனால் கஸ்தூரி ராஜாவின் ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கையை மனதில் வைத்து கொண்டு, நீயெல்லாம் எனக்கு தகுதியான சம்பந்தியா என்கிற பார்வையிலே தொடர்ந்து தனுஷ் தாய் – தந்தைக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலே லதா ரஜினிகாந்த் நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து தன்னுடைய தாய் தந்தைக்கு மாமியார் லதா ரஜினிகாந்த் தரப்பில் தகுந்த மரியாதை இல்லாததை உணர்ந்த தனுஷ், இதற்கெல்லாம் காரணம் ஸ்டேட்டஸ் தானே, உங்களை விட எனது தாய் – தந்தை ஸ்டேட்டஸ்ல் மிக உயர்ந்தவர்கள் எனபதை மாமியார் லதா ரஜினிகாந்துக்கு வெளிப்படுத்தவே ரஜினிகாந்த் வீட்டின் அருகேயே அந்த ஏரியாவில் என் தாய் – தந்தை இருக்கும் வீடு தான் மிக பெரிய வீடு என்று சொல்லும் அளவுக்கு 150 கோடி செலவில் பிரமாண்டமாக வீட்டை கட்டி முடித்து தாய்-தந்தைக்கு பரிசளித்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ஸ்டேட்டஸ் பார்த்து தனது தாய் – தந்தையை பல முறை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மாமியார் லதா ரஜினிகாந்த் தினமும் பார்க்கும் வகையில் உங்களை விட என் தாய் – தந்தை ஸ்டேட்ஸில் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று காண்பிக்கும் வகையில் தனுஷ் செய்த தரமான சம்பவம் தான், போயஸ் கார்டனில் புதியதாக கட்டப்பட்டுள்ள மிக பிரமாண்டமான வீடு என தகவல் வெளியாகியுள்ளது.