உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்காத ரஜினிகாந்த்… இதை பார்த்து திருந்துவரா நடிகர் அஜித் குமார்..

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அண்ணாத்தே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை சரி செய்யும் வகையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கால் சீட் கொடுத்து தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு அண்ணாத்தே படத்தில் 115 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த். அண்ணாத்தே பட தோல்வியின் காரணமாக தன்னுடைய சம்பளத்தை குறைத்து ஜெயிலர் படத்தில் 80 கோடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இது ரஜினிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தான் யானையல்ல, குதிரை, விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று ஏற்கனவே சந்திரமுகி படத்தில் வெற்றி விழாவில் பேசியிருந்தார். அதேபோன்று அண்ணாத்தே படம் தோல்விக்கு பின்பு தான் யானை அல்ல குதிரை என்பதை நிரூபிக்கும் வகையில், மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு வந்து முன்னனி நடிகர்களுக்கு சவால் விட்டு கொண்டிருக்கிறார்.

தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு, அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு படங்களில் லைக்கா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு படம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் மற்றொரு படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் சேர்த்து மொத்தமாக 250 கோடி சம்பளம் மற்றும் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து ரஜினிகாந்த் கேட்க உடனே தயக்கமே இன்றி லைக்கா நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இரண்டு படத்திற்கும் சேர்த்து ரஜினிகாந்த் பின் ஜிஎஸ்டி தொகையுடன் சுமார் 300 கோடி சம்பளம் பேசி ரஜினிகாந்தை கமிட் செய்துள்ளனர். சம்பள வரிசையில் சற்று பின்தங்கி இருந்த ரஜினிகாந்த் தற்போது ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி வாங்குவதால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் பெரும்பாலும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட சுமார் 90% படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்றது. அதேபோன்று விஜய் நடிக்கும் வாரிசு படம் மற்றும் அஜித் நடிக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே பெரும்பாலும் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆந்திராவைச் சார்ந்த சினிமா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

அதே நேரத்தில் தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் கதறி வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து தமிழ்நாட்டில் உள்ள கடலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு பெரும்பாலும் ரஜினிகாந்த் அவுட்டோர் சூட்டிங் தமிழ்நாட்டில் நடத்துவது கிடையாது. தற்பொழுது முதல் முறையாக ஜெயிலர் படத்தின் சூட்டிங் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு காரணம், தமிழ்நாட்டை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால், அவர்களுக்கு உதவும் வகையில் தான் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் ரசிகர்கள் தொல்லை காரணமாக படப்பிடிப்பு நடக்கும் ஒரு சில கிலோமீட்டருக்கு முன்பாகவே போலீசாரால் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள், இதனால் படப்பிடிப்பில் எந்த ஒரு சலசலப்பு இல்லாமல் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்காத ரஜினிகாந்தை பார்த்து நடிகர் அஜித் போன்ற நடிகர்கள் திருந்தவேண்டும் என வேலை வாய்ப்பின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.