நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்தே, இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நஷ்டத்தை சரி செய்வதற்காக அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் கால் சீட் கொடுத்து தற்பொழுது ஜெயிலர் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அண்ணாத்தே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த், அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் என பலரிடம் கதை கேட்டு வந்தவர். இறுதியில் நெல்சன் திலீப் குமாரை ஒப்பந்தம் செய்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது, கதையைக் கேட்ட ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஓகே செய்தவர் படத்தின் ஸ்கிரிப் மற்றும் திரைக்கதையை தயார் செய்ய வலியுறுத்தியுளளார். இதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி படத்திற்கான அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக தொடங்கினார்.
ஆனால் சிபி சக்கரவர்த்தி மீது நம்பிக்கை இல்லாத ரஜினிகாந்த் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலிய தந்தை தேவேந்திர பிரசாத்தை சிபி சக்கரவர்த்திக்கு சில ஆலோசனை வழங்க நியமித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் விஜய் பிரகாஷ் படத்தில் பல மாற்றங்களை கொண்டுவர வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிபி சக்கரவர்த்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ரஜினிகாந்த் – சிபி சக்கரவர்த்தி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஜினி நடிக்கும் புதிய ப்ராஜெட்ல் இருந்து சிபி சக்கரவர்த்தி வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதே போன்று இயக்குனர் தேசிங் பெரியசாமியிடன் கதை கேட்டு செய்து அந்த படத்தை AGS நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில், பின்பு படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கிறது என அந்த ப்ரோஜெட்ம் கைவிடப்பட்டது, இப்படி பல இயக்குனர்களிடம் கதை கேட்டு காக்க வைத்து கல்தா கொடுத்து வரும் ரஜினிகாந்தால், காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் ஒவ்வொரு இயக்குனர்களும் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய இயக்குனர் தேசிங் பெரியசாமி ஏற்கனவே ரஜினிகாந்துக்கு சொன்ன அதே கதையை ராஜ்கமல் பிலிம்ஸ்ல் தெரிவித்து அந்த கதை அவர்களுக்கு மிகவும் பிடித்து போனதை தொடர்ந்து உடனே இந்த படத்திற்கான அடுத்தடுத்து வேலைகளில் தீவிரம் காட்ட தொடங்கினார்கள், அந்த வகையில் இந்த ப்ரொஜெக்டில் நடிகர் சிம்பு கமிட்டாகி ரஜினிகாந்த் நடிக்க இருந்த அதே கதாபத்திரதத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி தற்பொழுது நடித்து வரும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற குழப்பம் நீடித்து வரும், நிலையில் கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து நம்ம ஒரு படம் பண்ணலாம் என கேட்க, அதற்கு அடுத்தடுத்து தனக்கு கமிட்மென்ட் இருக்கு இப்போதைக்கு முடியாது என லோகேஷ் கனகராஜ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இப்படி ரஜினிகாந்த் புதிய படத்திற்கான கதையை ஓகே செய்த பின்பு, அந்த படம் வாய்ப்புக்காக காத்திருந்த பல இயக்குனர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு தற்பொழுது இயக்குனர் பி.வாசுவை அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் அடுத்த படம் சேர்ந்து செய்யலாம், அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள் என தெரிவிக்க, தற்பொழுது பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பின் இடையே ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.