ரஜினி எடுத்த தன்னிச்சையான முடிவு… படுத்தே விட்ட வேட்டையன்… அவமானத்தை மறைக்க ரஜினி செய்த டக்காலட்டி வேலை…

0
Follow on Google News

வேட்டையன் திரைப்படத்தை அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்கின்ற எந்த ஒரு திட்டமும் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும், அந்த படத்தின் இயக்குனர் தாசே ஞானவேல்ராஜ்க்கு இல்லை. வேட்டையன் படத்தை வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவேண்டும் என்பதே படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமும் கூட. ஆனால் ரஜினிகாந்த் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் அவசர அவசரமாக வேலையை செய்து பட நிறுவனமும் இயக்குனரும் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்தனர். ரஜினிகாந்த் தன்னுடைய வேட்டையின் திரைப்படத்தை அவசர அவசரமாக ரிலீஸ் செய்வதற்கு காரணம் அவருக்கு அடுத்தடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி, அதன்பின்பு ஜெயிலர் 2 அதன் பின்பு இந்தி பட இயக்குனருடன் ஒரு படம்.

இப்படி தொடர்ந்து வரிசையில் அடுத்தடுத்து படத்தில் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருப்பதால்தான் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளி வரை இழுக்காமல் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படத்தில் கமிட்டானால் அவர் அந்த படத்தில் நடிக்கட்டும், வேட்டையன் படத்தில் அவர் நடித்து கொடுத்து விட்டார், மற்ற வேலைகளை பொறுமையாக செய்து வேட்டையன் படத்தை மெதுவாகவே தீபாவளி அன்று ரிலீஸ் செய்து இருக்கலாம்.

அந்த வகையில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படம் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை, தீபாவளி அன்று படம் ரிலீஸ் ஆனால், அதே தேதியில் மற்ற படங்கள் ரிலீஸ் ஆனால் தன்னுடைய படத்திற்கு பலத்த அடி விழும் என்பதால் தான் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தீபாவளிக்கு வேண்டாம் அக்டோபர் 10 அதை ஒட்டி ஆயுத பூஜை விடுமுறை என இந்த தேதியில் ரிலீஸ் செய்து சோலாவாக கலெக்ஷனை அள்ளிவிடலாம் என ரஜினியின் திட்டமாக இருந்துள்ளது.

ஆனால் ரஜினிகாந்த் எதிர்பார்த்த அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது, படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது, குறிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் இரண்டு நாள் தான், அதன் பின்பு பொதுவான காமன் ஆடியன்ஸை வைத்து தான் அந்த படம் வெற்றி அடையும், ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று காமன் ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனது வேட்டையன் திரைப்படம்.

மேலும் வேட்டையன் படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை மக்கள் மத்தியில் பரப்பி, இந்த படத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்தனர். இப்படி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி மிக எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், அடுத்து மற்றொரு பக்கம் மழை வந்து மொத்தமாக வேட்டையன் படத்தை படுக்க வைத்து விட்டது.

அதே நேரத்தில் வேட்டையன் சோலவாக வந்து இவ்வளவு பழத்த அடி வாங்கி இருக்கும் நிலையில், ஒருவேளை ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் படத்துடன் தீபாவளிக்கு இருக்கும் படங்களை முன் கூட்டியே ரிலீஸ் செய்து அந்த படம் நன்றாக இருந்திருந்தால், வேட்டையன் வந்த முதல் நாளிலிலே வசூலில் படுத்து இருக்கும், மேலும் தீபாவளி ரிலீஸ் ஆகியிருந்தாலும் வேட்டையின் படத்தை வெளியிட்ட பல ஸ்கிரீன்கள் வேட்டையனை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிட்டு இருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற அவமானங்களில் இருந்து தப்பிக்கவே ரஜினிகாந்த் சோழவாக வேட்டையன் படைத்த ரிலீஸ் செய்து தப்பித்து விட்டார் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here