அடுத்த 30 வருடத்துக்கு No problem .. ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட அதிநவீன சிகிச்சை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு என்னாச்சு, எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதய இதயத்திற்கு உள்ளே நான்கு அறைகள் இருக்கும். அதில் இடது பக்கத்தில் இருந்து கீழே இருக்கும் அறையிலிருந்து தான் ரத்தம் வெளியே செல்கிறது. அப்படி வெளியில் செல்லும் ரத்தக்குழாய்க்கு மகாதாவணி என்று பெயர்.

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடியது தான் இந்த மகாதாவணி. இந்த மகாதாவணியில் இருந்து ரத்தம் வெளியாகி இரண்டு பாகங்களாக பிரிகிறது ஒன்று நெஞ்சு பகுதியில் உள்ளது இரண்டாவது வயிற்று பகுதியில் உள்ளது. நெஞ்சு பகுதியில் இருக்கும் மகாதாவணி தான் இதய ரத்தக் குழாய், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய், கைகள் போன்ற பாவங்களுக்கு ரத்தம் செல்கிறது.

அதேபோன்று வயிற்றுப் பகுதியில் இருக்கும் மகா தாவணி என்பது வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கால் நிணிவிரல் வரை அந்த வயிற்றுப் பகுதியில் உள்ள மகாதாவணி மூலமாக தான் ரத்தம் செல்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடி வயிற்றில் இருக்கும் மகாதேவணியில் செல்லும் ரத்தக்குழாயில் சிறிதாக தசை வளர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு இது போன்ற இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்கின்ற ஒரு சூழல் இருந்தது.

ஆனால் தற்பொழுது மயக்க மருந்து கொடுக்க தேவையில்லை, அறுவை சிகிச்சையும் செய்யத் தேவையில்லை, அந்த சதை வளர்ந்த இடத்தில் ஒரு ஸ்ட்ரென்த் வைத்து விட்டால் பிரச்சனையை சரி செய்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்துக்கு அதிநவீனை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளதால், தற்பொழுது ரத்த குழாய் இயல்பாக செயல்பட தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஒரு குழந்தை பிறக்கும் போது எந்த மாதிரியா ஒரு புத்துணர்வோடு ரத்தக்குழாய் இருக்குமோ அதே போன்று தற்போது ரஜினிகாந்திற்கு அந்த இரத்த குழாய் ஒரு புத்துணர்வோடு சரி செய்யப்பட்டுள்ளனர் மருத்துவர்கள். அடுத்து ஒரு 30 40 வருடங்களுக்கு அந்த ரத்த குழாயில் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதுபோன்று சிகிச்சை எல்லாம் இதற்கு முன்பு அமெரிக்கா சென்று தான் பெற முடியும் என்ற ஒரு சூழல் இருந்தது.

ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் இது போன்ற நவீன சிகிச்சைகள் காலில் விரல் மூலம் கொண்டு செலுத்தி அந்த ரத்த குழாயை சரி செய்வதற்கான அதி நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ரஜினிகாந்த் சரியான நேரத்திற்கு வந்ததால் மட்டுமே அவருக்கு எந்த ஒரு சிரமமின்றி சிகிச்சை அளிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ரத்த குழாயில் இது போன்ற பாதிப்புகள் வருவதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்கள் விளக்கிறார்கள். ஒரு இயல்பான மனிதன் டென்ஷன் ஆகும்போது ஏற்படுகின்ற பிளட் பிரஷர் கூட இது போன்ற பிரச்சனைகள் ரத்தக் குழாயில் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயதின் காரணமாக இயல்பாகவே இது போன்ற ரத்த குழாய் பிரச்சனைகள் வரும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்

பொதுவாக ரத்தக்குழாய் பாதிப்புக்கு முக்கிய காரணம் எப்ப எல்லாம் ஒருவருக்கு டென்ஷன் ஏற்படுகிறதோ, புகைப்பழக்கம் மற்றும் சுகர் உள்ளவர்களுக்கு ரத்த குழாய்க்கான பிரச்சனை வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.