சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு குறித்து படமெடுக்க ஆசை என இயக்குனர் சங்கர் தெரிவித்த நிலையில், அதற்கான வாய்ப்பை ரஜினிகாந்த் நிச்சயம் தரமாட்டார் என்றும், குறிப்பாக சங்கரால் ஏற்பட்ட அவமானத்தினால் இனிமே சங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டது சென்றவர் ரஜினிகாந்த் என்கின்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு என்ன அவமானம் ஏற்பட்டது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சங்கர் இயக்கத்தில் எந்திரன் 2 படத்தில் நடித்து கொண்டிருந்த பொழுது, அங்கே தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்த சங்கரின் அக்கா மகன் பப்பு தொடர்ந்து ரஜினியை மிகத் தரக்குறைவாக நடத்தி வந்துள்ளார், ரஜினியிடம் எப்போதும் முகத்தை சுண்டி கடுகடுவன பேசி வந்திருக்கிறார்.
ஒரு முறை ரஜினிகாந்த் படபிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த போது, நடிகர் ரஜினிகாந்தை பார்த்து என்ன சார் நீங்க, சூட்டிங் ஒழுங்காக வர மாட்டீங்களா என்று கடுகடுவென பேசியிருக்கிறார் இயக்குனர் சங்கரின் அக்கா மகன் பப்பு. இந்த நிலையில் இந்த அவமானத்துடன் மேக்கப்பில் உட்கார்ந்த ரஜினிகாந்த், என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுபோன்று யாரும் என்னை தரம் தாழ்ந்து பேசவில்லை என்று வருத்தப்பட்டவர்.
அந்த பதற்றத்துடனையே மேக்கப் முடிந்து படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வழியில் தடுமாறி விழுந்த ரஜினிகாந்த்க்கு ரத்தம் காயம் ஏற்படுகிறது, உடனே அங்கே ஆம்புலன்ஸ் வரவழைத்து, ரஜினிகாந்த் பத்து நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு, படப்பிடிப்பு ரத்தம் செய்ய ப்படுகிறது. எந்திரன் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பொழுது அவருடைய உடை சுமார் 15 கிலோ என்பதால், அவருடைய வயது காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனை அறிந்த அங்கு உள்ள காஸ்டியூம் டிசைனர், இயக்குனருக்கும் கேமராமனுக்கும் தெரியாமல் அதே போன்ற உடையை இடை குறைந்து தயார் செய்து ரஜினிக்கு கொடுத்து இருக்கிறார்கள், இது இயக்குனர் சங்கருக்கும் கேமராமனுக்கும் தெரியாமலே இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்து உள்ளது. ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் மூலமாக ரஜினிகாந்தின் டிரஸ்ஸில் பிரச்சனை இருப்பதை அறிந்து கொண்ட சங்கர்.
உடனே அந்த காஸ்யூம் டிசைனர்களை கண்ட திட்டி, எடுத்துட்டு வாருங்கள் 15 கிலோ ட்ரெஸ்ஸை, உடனே மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறார் சங்கர். மீண்டும் 15 கிலோ எடை கொண்ட ட்ரெஸ்ஸை ரஜினிகாந்தை போட வைத்து படாதபாடு படுத்தி சித்திரவதை செய்திருக்கிறார் சங்கர் என்று கூறப்படுகிறது, அது மட்டும் இல்லாமல் பொதுவாகவே படப்பிடிப்பு தளத்தின் அருகில் நடிகர்களின் கேரவன் இருக்கும்.
ஆனால் ரஜினியின் கேரவன் மட்டும் நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்து அங்கிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினிகாந்தை நடந்து வர வைப்பதில் அங்கே படப்பிடிப்பு தளத்தில் ப்ரொடக்ஷன் டிபார்ட்மெண்டில் வேலை செய்த சங்கரின் அக்கா மகன் பப்புக்கு அவ்வளவு சந்தோஷம் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த படத்தில் இந்தி நடிகர் நடித்த அக்ஷய குமாரை விழுந்து விழுந்து கவனித்தவர்கள், தொடர்ந்து ரஜினியை அவமதிப்பு செய்து வந்ததின் காரணமாக, இது எல்லாமே சங்கருக்கு தெரிந்து தான் நடக்கிறது என்று புரிந்து கொண்ட ரஜினிகாந்த், அந்த படத்தின் படப்பிடிப்பு கடைசி நாளில் ஒரு முக்கிய நபரை அழைத்த ரஜினிகாந்த்.
இனிமே நான் சங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சங்கரிடமே தெரிவித்து விடுங்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த், அந்த வகையில் என்னதான் சங்கர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க ரஜினிகாந்த் கால் சீட் கேட்டு சென்ட்ரால் இனி ரஜினிகாந்த் வீட்டு கதவு கூட சங்கருக்காக திறக்கப்படாது என்கிறது சினிமா வட்டாரங்கள்.