தெறிக்க விட்ட ரஜினிகாந்த்… கை கட்டி மன்னிப்பு கேட்ட விஜய்… இப்பாவது தெரியுதா ரஜினியின் பவர்…

0
Follow on Google News

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சி பெயரை அறிவித்து, சமீபத்தில் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் நடிகர் விஜய். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கும் ரஜினிக்கும் இடையில் இருந்த மோதல் ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது.

இந்த நிலையில் நடிகர் ரஜினி மாதிரி அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன், என்று ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு கடைசியில் ஏமாற்றிவிட்டு நான் அரசியலுக்கு வரவில்லை என்று பயந்து கொண்டு எங்க தலைவர் விஜய் ஓட வில்லை. அதிரடியாக கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ள விஜய் விரைவில் மாநாடும் நடத்த உள்ளார் என விஜயின் ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டு வருகிறார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஸ்கூல் பசங்களான விஜய் ரசிகர்களுக்கு, ரஜின சினிமாவில் இருந்து கொண்டு அரசியலுக்குள் வராமலே அரசியலில் பல மாற்றங்களை அதிரடியாக செய்தவர் என்பதை விட, ஆளும் அதிகாரத்தை துணிந்து எதிர்த்தவர் என்பது ரஜினிகாந்தின் பழைய வரலாறை அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

1990 இல் இருந்து 96 வரை முதலமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்துக்கும் நேரடியாக உரசல் ஏற்பட்டு அது மோதலாக வெடிக்கிறது. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் செவாலிய விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதலமைச்சரான ஜெயலலிதாவும் கலந்து கொண்டார், அப்போது ஜெயலலிதா அரசால் புதிதாக தொடங்கப்பட்ட திரைப்பட நகருக்கு ஜே ஜே திரைப்பட நகர் என்று பெயர் வைத்திருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் மேடையில் ஜெயலலிதாவை வைத்துக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், திரைப்பட நகருக்கு எம்ஜிஆர் நகர் அல்லது சிவாஜி நகர் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசுகையில் ஜெயலலிதா முகம் கோபத்தில் மேடையிலே சிவந்தது. இப்படி ஒரு இரும்பு பெண்மணி அழைக்கப்பட்ட ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு அவரை செயலை எதிர்த்து பேசியவர் ரஜினிகாந்த் என்பது வரலாறு.

மேலும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஜினிகாந்த் கொடுத்த அந்த ஒரு வாய்ஸ், அதாவது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக கொடுத்த அந்த ஒரு வாய்ஸ் தமிழக அரசியலை திருப்பி போட்டது. ஆம் ஜெயலலிதா தோல்வியை தழுவினார் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உண்டானது.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் மனதில் பட்டதை துணிந்து ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் டைம் டு லீட் என்ற வசனம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சீண்டுவது போன்று அமைந்திருந்தது. வெறும் போஸ்டரில் மட்டும் இடம் பெற்ற அந்த வசனத்திற்காக தலைவா படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து எங்கெங்கோ விஜயும் விஜய் தந்தையும் சென்று படம் வெளியாவதற்கான அறிகுறியே இல்லை, உடனே முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க அவர் தங்கி இருந்த கொடநாடு பங்களாவுக்கு செல்கிறார்கள் விஜயும் அவருடைய தந்தையும். ஆனால் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் கொடநாடு பங்களாவில் இருந்த காவலாளி விஜயையும் விஜய் தந்தைக்கும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுத்துவிட்டார்.

இப்படி கோடநாடு சென்று திரும்பி வந்த விஜய் கைகட்டி அம்மா உதவி செய்யுங்கள் என ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்காத குறையாக வீடியோ வெளியிட்ட பின்பு தான், அதுவும் தலைவா படத்தின் போஸ்டரில் டைம் டு லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு திரைக்கு வந்தது. இந்த பிரச்சனைக்கு பின்பு அரசியல் குறித்து எந்த ஒரு தலையிடும் இல்லாமல் அடக்கி வாசித்த விஜய் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தான் மீண்டும் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்தார் என்பது வரலாறு.