நடிகர் விஜய் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சுமார் 10,000 க்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு தனியாக சீருடை வழங்கி இந்த மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க வகையில் தயார் நிலையில் உள்ளனர்.
அதே நேரத்தில் துபாயிலிருந்து தனியார் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு பணிக்கு செக்யூரிட்டிகள் வரவழைக்கப்பட்ட உள்ளார்கள். இவர்கள் ஒரு கட்டத்தில் காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் துபாயிலிருந்து இந்த செக்யூரிட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் மாநாட்டில் நடந்து விடக்கூடாது, குறிப்பாக பெண்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருக்கிறார்.
அதனால் இந்த பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக விஜய் இருந்து வருகிறார். இந்த நிலையில் உலக தமிழர்களின் பார்வையே ஒட்டுமொத்தமாக விக்கிரவாண்டி மாநாட்டு பக்கம் திரும்பி உள்ள நிலையில். தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 2000 வேன்களில் இருந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் பேருந்துகளில் இருந்தும் பயணித்து விக்கிரவாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், அந்த வகையில் பணம் கொடுத்து கூட்டாமல் விஜய் என்கின்ற தனி மனிதனுக்காக விக்கிரவாண்டியில் மிகப்பெரிய கூட்டம் கூடி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
அதனால் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு அங்கே தங்க விடுதியில்லாமல் வாகனத்திலேயே பலரும் தங்கி வருகிறார்கள். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எழுந்த எழுச்சியை தற்பொழுது விஜய் மாநாடு நடக்கும் விக்கிரவாண்டி பகுதிகளில் அங்கே சாரசாரையாக மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் விஜய் கட்சியின் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் விஜய் தெளிவாக முன்கூட்டியே எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் விஜய் ரஜினி இருவருக்கும் இடையில் ஒரு உரசல் ஏற்பட்டபோது காக்கா கதை ஒன்று ரஜினி தெரிவித்து இருப்பார், அதிலிருந்து விஜய் ரசிகர்களை காக்கா கூட்டம் என்று சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஆனால் ரஜினி எதை மனதில் வைத்து சொன்னாரோ, அதுவே தற்பொழுது அதுவே ரஜினிக்கு பதிலடியாக அமைந்துள்ளது, அதாவது ஒரு பாடல் வரும் காக்கா கூட்டத்தை பாருங்க அதற்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க, ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும் என்று ஒரு பாடல் வரும், அந்த பாடலுக்கு ஏற்றார் போல் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக விக்கிரவாண்டியில் பெரும் கூட்டமாக இருந்தாலும்,
எங்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ஒரு மாநாடு எந்த விதம் அசம்பாவிதம் இல்லாமல் ஒழுக்கமாக எப்படி நடத்த வேண்டும் என்றும், நாங்கள் காக்கா கூட்டம் தான், அந்த காக்கா கூட்டத்தை பார்த்து கற்றுக்கொளுங்க என சைலண்ட்டாக விஜய் ரசிகர்களை விஜய் வழிநடத்துவது, ரஜினி சொன்ன காக்கா கதை அவருக்கே தற்பொழுது சைலன்டாக பதிலடியாக அவர் முகத்தில் கரியை பூசுவது போன்று அமைந்துள்ளது.இந்த நிலையில் விஜய் என்கிற ஒற்ற மனிதனுக்காக கூடிய இந்த மாபெரும் கூட்டத்தை, விக்கிரவாண்டியில் விதைக்கப்பட்ட இந்த விதையை எப்படி வளர்த்து விளைச்சலாக உருவாக்கி ஆட்சி எனும் அதிகாரத்தில் அமர வைக்க போகிறார் என்பதுதான் விஜய்க்கு இருக்கப் போகிற மிகப் பெரிய சவால்.