வேஷம் போடும் தமிழ் நடிகர்களை சவுக்கால் அடித்தது போல் பேசிய ரஜினி… தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது.!

0
Follow on Google News

மராட்டியத்தை பூர்வீகமான கொண்ட, நடிகர் ரஜினிகாந்த் கன்னடாவில் பிறந்து, அங்கே பஸ் கண்டக்டராக பணியாற்றி, பின்பு சினிமா மீது இருந்த ஆர்வம், நண்பர் உதவியுடன் சென்னைக்கு வந்து சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு, பின்பு இயக்குனர் பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தன்னுடைய ஸ்டைலான நடிப்பினால் தமிழக மக்களை கவர்ந்து கோடிக்கணக்கான தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் சினிமாவில் சுமார் 40 வருடங்களாக, இன்றும் வரை யாரும் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார் ரஜினிகாந்த். கோடான கோடி தமிழ் மக்களால் ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த் மீது தொடர்ந்து மொழி ரீதியாகவும், இனரீதியான விமர்சனங்களை சக சினிமா துறையை சேர்ந்தவர்களால் பல முறை சந்தித்து வருகின்றவர் ரஜினிகாந்த்.

பலமுறை ரஜினிகாந்த் இருக்கும் மேடைகளிலே இனரீதியாக நடிகர் சத்யராஜ் மிக கடுமையாக ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியுள்ளார். ஆனால் ரஜினிகாந்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசிய சத்யராஜ், பின்பு அவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் கன்னட மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது தன்னுடைய சுயலாபத்திற்காக கன்னட மக்களிடம் தன்மானத்தை இழந்து வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்.

இதே போன்று சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தெலுங்கு மொழியில் ஓட வைப்பதற்காக, ஆந்திராவில் சுஹாசினி பேசுகையில், பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சியாகவும் , தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று முகத்தை சலிப்பாக வைத்து கொண்டு பேசிய சுஹாசினி,

பொன்னியின் செல்வன் படம் உங்களுக்கான படம் என்றும், நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பேசினார் சுகாசினி. பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழியில் ஓட வைப்பதற்காக, அந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, தமிழ்நாட்டை குறைத்து சுகாஷினி பேசியது, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயலாக அமைத்தது, அதே போன்று ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் அந்த மொழியில் தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக உங்களுக்கு தமிழ், தெலுங்கு இதில் எது பிடிக்கும் என நெறியாளர் கேள்வி எழுப்ப தனக்கு பிடித்த மொழி தெலுங்கு என நடிகர் கார்த்திக் கடந்த காலங்களில் பேசியது குறிப்பிடதக்கது.

இப்படி ரஜினிகாந்தை கன்னடன், தமிழன் கிடையாது என்று ஒரு பக்கம் விமர்சனம் செய்துவிட்டு, பிறமொழி மக்களிடம் தமிழர்களையும், தமிழ் மொழியையும் அவமானப்படுத்தும் வகையில் செய்யப்பட்டு வரும் தமிழ் சினிமா துறையினர் மத்தியில், கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரஜினிகாந்த் தமிழனை தலைநிமிர செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னட மாநிலத்தில் நடந்த விழாவில் கொட்டும் மழைக்கு நடுவே கன்னட ரசிகர்களின் மத்தியில் கர்நாடக மக்களுக்கு அந்த மாநிலத்தின் 67-வது உதய தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தவர். மேலும் சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் தனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாக அனல் பறக்க பேசி, கன்னட மக்கள் மத்தியில் தமிழனை தலைநிமிர செய்துள்ளார்.

இந்த நிலையில் தன்னை மொழி ரீதியாகவும், இன ரீதியாக கடுமையாக தாக்கிவிட்டு பிற மொழி ரசிகர்களை குளிர்விக்க தமிழனையும், தமிழ் மொழியையும் குறைத்து பேசும் சினிமா துறையினருக்கு சவுக்கால் அடித்தது போன்று தரமானம் சம்பவம் ஒன்றை செய்து ஒவ்வொரு தமிழனையும் கன்னட மக்கள் மத்தியில் தலைநிமிர செய்த ரஜினிகாந்தை தமிழக மக்கள் தலையில் வைத்து கொண்டாடாமல் வேறு என்ன செய்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.