ரஜினி எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஐஸ்வர்யா கேட்கல.. மனநிம்மதியின்றி ரஜினிகாந்த்..

0
Follow on Google News

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் இருவரும் தங்கி இருந்த நிலையில் அங்கிருந்து தனித்தனியாக தாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிக்கை ஒன்றை அவர்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரிவதாக உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தைகள் நலன் கருதி இவர்கள் இருவரும் இணைவார்கள்.

இரண்டு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது, அதே நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு அவருடைய குழந்தை பள்ளி விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து விட்டார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது.

ஆனால் அதெல்லாம் உண்மையான தகவல் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழங்க கோரி வழக்கு தொடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கையில் இடையில் நடிகர் ரஜினிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் இருந்த சிறிய அடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பான நிலைக்கு ரஜினிகாந்த் திரும்பி வந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் ரஜினிகாந்த்க்கு தற்போது மன அமைதி ரொம்ப முக்கியம் என்று தெரிவித்திருந்தனர். அவருக்கு எந்த விதத்திலும் மன உளைச்சலை கொடுத்து விட கூடாது என குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதாவிடம் மீண்டும் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் இணைந்து வாழ வேண்டும், அதனால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று ஒன்றாக வாழ வேண்டும் என்று மனைவியிடம் தன்னுடைய ஆசையை தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை அழைத்து அப்பாவுக்காக நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று எவ்வளவோ எடுத்து தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு சமூக முடிவும் ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைக்காக இருவருமே ஆஜராகம இருந்த நிலையில். இருவரும் ரஜினிகாந்தின் விருப்பத்திற்கு ஏற்ப, மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது.

ஆனால் தங்களுடைய விவகாரத்தில் இவர்கள் இருவரும் உறுதியாக இருந்த காரணத்தினால் சமீபத்தில் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனை தொடர்ந்து தன்னுடைய மகள் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று ரஜினிகாந்த் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனுஷ் ஐஸ்வர்யா இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதனால் நிச்சயம் ரஜினி மணமடைந்து கண்கலங்கி இருப்பார் என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய தந்தை வயதான காலத்தில் மகள்கள் நிச்சயம் அவருக்கு மகிழ்ச்சியை தர வேண்டும். அந்த வகையில் ஐஸ்வர்யா அவருடைய மகன் கல்லூரி படிக்க இருக்கும் இந்த காலத்தில் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழாமல் கணவரை விட்டு பிரிந்து என்ன சாதிக்கப் போகிறார் என்றெல்லாம் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தனுஷ் பக்கம் தவறு இருந்திருந்தால் கூட ஐஸ்வர்யா விட்டுக் கொடுத்து இருவரும் ஒன்றிணைந்து வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here