லியோவை அடித்து துவம்சம் செய்த ஜெயிலர்… வெறித்தனமா சம்பவம் செய்யும் ரஜினிகாந்த்..

0
Follow on Google News

விஜய், ரஜினி இருவருக்கும் இடையே நடக்கும் மறைமுக பனிப்போர் தான் இப்போது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் கொளுத்தி போட்ட பிரபலங்கள் மிகப்பெரும் சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டனர். அவர்கள் கொளுத்திய தீயானது இன்று வரை எரிந்து கொண்டே இருக்கிறது.

பற்றி எரியும் நெருப்பில், சில பிரபலங்கள் அவர்கள் பங்குக்கு எண்ணையும் ஊற்றிக் கொண்டே தான் இருக்கின்றனர். அது மட்டுமின்றி இரு தரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாவில் சண்டையிட்டு வருவது தற்போது இந்த யுத்தமானது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது. அதே நேரம் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படங்களுக்கான வியாபாரம் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்த் தான் எப்போதும் நம்பர் ஒன். ஆனால் மற்ற இடங்களில் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இதனால் லியோ படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வியாபாரம் ஆகியிருந்தது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் லியோ படத்தின் விநியோக உரிமை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 9.5 கோடி கொடுத்து ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் லியோ படத்தை வாங்கி இருந்தது. இந்நிலையில் கேரளாவில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை ஜெயிலர் செய்துள்ளது. ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் கேரளா மக்களிடமும் ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் லியோ படத்தை வாங்கிய ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் ஜெயிலர் படத்தை 12 கோடி கொடுத்து வாங்கி உள்ளனர்.

இதுவரை தமிழ் படங்களை கேரளாவில் இவ்வளவு விலைக்கு யாரும் வாங்கியதில்லை. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஒரு புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். அது மட்டும் இன்றி இவர்களின் மோதல் தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது. யாரின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக கலெக்ஷன் செய்யும் என்பதுதான் இவர்களின் அடுத்த போட்டியே. இதனிடையே வெளிநாட்டு உரிமை, ஓடிடி ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என இப்போதே கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் ஜெயிலர் படம் வியாபாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவில் உள்ள 75 இடங்களில் 136 காட்சிகள் ஜெயிலர் திரையிடப்பட உள்ளதாம். மேலும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் விற்பனை அமெரிக்காவில் இப்போதே தொடங்கியுள்ள நிலையில், இதில் இருந்து மட்டுமே அமெரிக்கா டாலர் $70 ஆயிரத்துக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாம். இது இந்திய மதிப்பில் ரூபாய் சுமார் 60 லச்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் லியோ டீம் முறியடிக்க வேண்டும் என்று இப்போதே பல பிளான் போட்டு கொண்டு இருக்கிறார்களாம். இருவரின் பாக்ஸ் ஆப் கலெக்ஷன் கொண்டு மட்டுமே யார் வெற்றி பெற்றது என்று அறிய முடியும். அதற்கு நாம் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும்.