விஜய்க்கு ஜால்ரா போட்டு ரஜினியிடம் வாய்ப்பை இழந்த பரிதாபம்… லோகேஷிடம் ஸ்டிட்டாக சொன்ன ரஜினி…

0
Follow on Google News

தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வெற்றி விழா குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் இயக்குனர் ரத்தினகுமார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்னகுமார், எனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான். அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விஜய் எப்போதும் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்ற சர்ச்சையான கருத்தை பேசி இருக்கிறார்.

இவர் இப்படி கூறியதற்கு காரணம் ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் அவர்கள், காக்கா- கழுகு கதை சொல்லியிருந்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் காக்கா என்று விஜய் தான் குறிப்பிட்டு ரஜினி பேசியிருந்ததாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ரத்தினகுமார், எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று கழுகை குறிப்பிட்டு பேசியிருந்தது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மறுபக்கம் ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான சன் பிக்சர்ஸ், மீண்டும் ரஜினியுடன் இணைவதாக அறிவித்தது. அதன்படி ரஜினியின் 171வது படமாக உருவாகும் அதன் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் கமிட்டானார். இந்நிலையில் ரத்ன குமார் பேச்சால் ரஜினிகாந்த் காண்டாகி உள்ளாராம். அதனால் லோகேஷ் உடன் படம் நடிக்க வேண்டாம் என்றும் முடிவு எடுத்து விட்டாராம். பின் பல ஆலோசனைகளுக்கு பின்பு மீண்டும் நடிக்க சம்மதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ஒரு கண்டிஷனும் போட்டுள்ளாராம். அதாவது ரத்னகுமார் தலைவர் 171 படத்தில் தலையிடக்கூடாதாம். மேலும் ரத்னகுமாரின் பேச்சுக்காக ரஜினி ரசிகர்கள் ரத்னகுமாரை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து பிரேக் எடுத்துக் கொள்வதாக ரத்னகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கதை எழுதுவதற்காக பிரேக் எடுப்பதாகவும் அடுத்த பட அறிவிப்பு வரும் வரை இது தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைவதால், தலைவர் 171 படம் மீது ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினி, லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் அனிருத், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. தலைவர் 171 LCU படமாக உருவாகவில்லை எனவும், இது ரஜினிக்கு தனியாக எழுதப்பட்ட கதை என்றும் லோகேஷ் கூறியிருந்தார். இப்படத்திற்கு முதல் வேலையாக ரஜினிக்கு வில்லனை செலக்ட் செய்ய முடிவெடுத்துள்ளாராம். அதன்படி தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி ராகவா லாரன்ஸிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், சந்தானம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதில் முதலில் நடிக்கவிருந்தது ராகவா லாரன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர் 171 படத்திற்காக ரஜினிக்கு 250 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.‌ஜெய்லர் படத்திற்காக ரஜினி 200 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வதந்தி உண்மையாக இருந்தால், ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பே ரஜினி ஜாக்கி சானின் சம்பளத்தை விட அதிக சம்பளம் வாங்கி சாதனை படைத்து இருந்தார்.