கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன் என சும்மா இருந்த தனது ரசிகர்களை உசுப்பேத்தி விட்ட ரஜினிகாந்த், மேலும் அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது” நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி என நரம்பு புடைக்க பன்ச் வசனமெல்லாம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டார்.
தலைவர் இதோ கட்சி தொடங்கிவிடுவார், அதோ தொடங்கிவிடுவார் என எதிர்பார்த்த காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் மட்டுமே வந்ததே தவிர, அரசியல் கட்சிக்கான எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட பட்டுள்ளதாக அப்போது கூறப்பட்டது, அதில் கபாலி படத்தின் வருமானம் இளைய மகள் சௌதர்யாவுக்கு, அடுத்து காலா படத்தின் வருமானம் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு என அடுத்தடுத்து பேட்ட, தர்பார், அண்ணாத்தே என தொடர்ந்து திரைப்படங்களில் இடைவேளை இல்லாமல் நடித்து வந்தார் ரஜினிகாந்த்,
இந்நிலையில் அரசியல் அறிவிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிய ரஜினிகாந்த் கொரோனவை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என ரசிகர்களுக்கு ஆல்வா கொடுத்து அண்ணாத்தே படப்பிடிப்பில் பிசியானார். உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமாட்டேன் என ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த ரஜினிகாந்த், உடல் நிலை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூட செய்திகள் வெளியானது.
ஆனால், கோடி கோடியாக பணம் கொட்டி கிடந்தாலும் பணத்தாசை யாரை விட்டது, அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட்டாகி வரும் ரஜினிகாந்த் மேலும் மேலும் கோடிகளை குவித்து வருகிறார்.இந்த நிலையில் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு அவருடைய அடுத்தடுத்து படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து நிலையில், அரசியலுக்கு வரவில்லை என்று ரசிகர்களை ஏமாற்றிய பின்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தே தோல்வியை சந்தித்தது.
இதனால் தான் நடிக்கும் அடுத்தடுத்து படங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால், ரசிகர்களை உசுப்பேத்தி விடவேண்டும் என்கிற திட்டத்துடன், சென்னையில் ரஜினி மாநாடு என சுமார் 4 ஆயிரம் ரசிகர்களை அழைத்து மிக பிரமாண்டமாக நடந்த திட்டமிடப்பட்டது. இதற்கு ரஜினி ரசிகர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் இந்த மாநாட்டில் சுமார் 12 ஆயிரம் நபர் வரை பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என ரஜினிக்கு தகவல் சென்றுள்ளது.
இதனால் மாநாடு பட்ஜெட் அதிகரிக்கும் மேலும் பெரும் ரசிகர் கூட்டம் மாநாட்டிற்கு வருவதால், அங்கே ரசிகர்கள் தேவையில்லாத அரசியல் கோஷங்களை எழுப்பி, அது ஆளும் தரப்புக்கு எதிராக அமைந்துவிடும் என்கிற ஒரு ரிபோர்ட் ரஜினியின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து மிக பிரமாண்டமாக ரசிகர் மாநாடு நடத்தி அதில் ஏற்படும் தேவையில்லாத சர்ச்சையின் காரணமாக மேலும் தனக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதற்காக மாநாடு நடத்துவதையே கைவிட்டு விட்டாராம் ரஜினிகாந்த்.
இது குறித்து மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. மாநாடு நடத்துவதற்கு ரசிகர் ஒருவர் பொறுப்பேற்று இருந்ததாகவும், மாநாட்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணத்தை விட அதிகமாக சுமார் ஒரு கோடி வரை செலவு ஆகும் என்பதால் தன்னுடைய ரசிகர் அதிகம் செலவு செய்து பாதிக்கப்பட வேண்டாம் என்பதற்காக தான் ரஜினி மாநாட்டை ரத்து செய்து விட்டார் என கூறப்படும் நிலையில், ரசிகர்கள் பாதிக்கப்பட வேண்டாம் என்றால், கோடிகளை குவித்து வைத்துள்ள ரஜினிகாந்த் சொந்த பணத்தில் மாநாடு நடத்தலாமே என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.