ரஜினிக்கே ஆப்பு வைத்து இளையராஜா… என்ன தான் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் இல்லையா.?

0
Follow on Google News

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியை வைத்து படம் எடுக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்திற்கான முதல் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் டீசர் ஆக வெளியிட்டு இருந்தனர்.

இதில் தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாராகி வரும் ‘கூலி’ படத்தின் டீசரில் தன்னுடைய அனுமதியின்றி தனது இசையை பயன்படுத்தி இருப்பதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 70 மற்றும் 80களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் இளையராஜா. தற்பொழுது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தன்னுடைய அனுமதி இன்றி தனது இசையை எல்லா இடத்திலும் பயன்படுத்தி வருவதாக வரிசையாக கேஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரின் இடம் பெற்றுள்ள இசையில், இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடலின் இசையை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும், அந்த இசைக்கு உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது காப்புரிமை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஏற்கனவே கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் அனுமதி பெறவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தவிர, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான பைட் கிளப் படத்திலும் இளையராஜாவின் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதாக அந்த நோட்டீசில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து தனது இசையை தன்னிடம் அனுமதி பெறாமல் பல படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கூலி பட குழுவினர் படத்தின் டீசரில் பயன்படுத்திய “வா வா பக்கம் வா” பாடலின் இசைக்கு தன்னிடம் முறையான அனுமதி பெற வேண்டும் இல்லை எனில் படத்திலிருந்து இசையை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும் அவ்வாறு செய்ய தவறினால், பட குழுவினர் மீது சட்டை ரீதியான நடவடிக்கை எடுக்க தங்களுக்கான உரிமைகளும் இருப்பதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தன்னுடைய இசையை அனுமதி இன்றி பயன்படுத்துவதாக இரண்டு இசை நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையராஜா, தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி புதுப் பிரச்சினையை கிளப்புவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் மீண்டும் நெட்டிசன்கள் இளையராஜாவை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.