நடிகை நயன்தாரா சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறுகையில், 2005-ல் வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் சமயத்தில், ரஜினிகாந்த் அவ்வளவு பெரிய நடிகர் என்று அந்த படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு தெரியாது, என்று நயன்தாரா அளித்த பேட்டி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. நடிகர் ரஜினி நடித்த முத்து படம் வெளியான போது அவருடைய புகழ் ஜப்பான் வரை பரவி இருந்தது.
அப்படி இருக்கும் பொழுது பக்கத்து மாநிலம் கேரளாவில் இருந்த நயன்தாராவுக்கு ரஜினியின் புகழ் நயன்தாராவுக்கு தெரியாதா என்கின்ற விமர்சனமும் நயன்தாராவை நோக்கி எழுந்துள்ளது. பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்கின்ற வசனத்திற்கு எப்ப ரஜினிகாந்த் பேரைச் சொன்னாலே உலக அளவில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை எனக்கு அவ்வளவு பெரிய நடிகர் என்று எனக்கு தெரியாது, பின்பு தான் தெரியவந்தது என்று நயன்தாரா பேசுவதெல்லாம் சுத்த பேத்தல் தனமான ஒரு செயல் என்கின்றனர் சினிமா துறையைச் சார்ந்தவர்கள். மேலும் சந்திரமுகி படத்தில் நயன்தாரா தன்னுடன் நடிக்கும் போது ரஜினிகாந்த் அவரிடம் எளிமையாக பழகி இருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் நயன்தாரா சிம்பு குறித்து பல சர்ச்சை கூறிய கருத்துக்கள் உலா வந்த நேரம் அது, அப்படி இருந்த காலத்தில் நயன்தாராவிற்கு நிறைய அட்வைஸ் செய்திருக்கிறார் ரஜினி, ஏம்மா இப்படி போய் சிக்கிக் கொள்கிற, உனக்கென்று ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது, உனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கை இருக்கிறது, என்றெல்லாம் சந்திரமுகி படப்பிடிப்பு தளத்தில் அட்வைஸ் செய்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
சிம்பு விவகாரத்தில் கடும் அப்செட்டில் இருந்த நயன்தாராவிற்கு அட்வைஸ் செய்து அந்த விவகாரத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது நடிகர் ரஜினிகாந்த் என்கின்றனர் சினிமா துறையினர். இவ்வளவு விஷயம் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் பொழுது நடந்ததை, நயன்தாரா எனக்கு தகப்பன் ஸ்தானத்திலிருந்து பல அட்வைஸ்கள் செய்து என் வாழ்க்கையில் அக்கறை காட்டியவர் ரஜினிகாந்த் என்று கூட அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால் சந்திரமுகி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிகாந்த் அவ்வளவு பெரிய நடிகர் என்று எனக்கு தெரியாது என்று நயன்தாரா சொல்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல்,இந்த பேச்சு நயன்தாராவின் ஆணவத்தின் உச்சம் என்கின்ற கருத்தும் உலா வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.