நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் குஷி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு PAN INDIA படமாக வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சமந்தா பங்கேற்காத நிலையில், விஜய் தேவரகொண்டா மட்டும் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், பத்திரிக்கையாளர் ஒருவர், ‘தொடர்ந்து உங்களது படங்கள் தோல்வி அடைந்து வருவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தாக்கும் வகையில் அளித்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது, ரஜினி சாருக்கே 6 படம் ஃப்ளாப் ஆனது. இப்போது ஜெயிலர் படம் 500 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல, கமல், விஜய், சிரஞ்சீவி படங்களும் ஓடவில்லை வெற்றி என்பது தோல்விக்கு அப்பாற்பட்டது என்றார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ஜெய்லர். இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். ஒருபக்கம், ஜெயிலர் படம் எக்கச்சக்கமான பாசிட்டிவ் ரிவ்யூக்களை குவித்து வந்தாலும், மறுபக்கம் பல சர்ச்சைகள் சூப்பர்ஸ்டாரை சுழன்று அடிக்கிறது.
இந்நிலையில், விஜய் தேவர் கொண்டா அளித்துள்ள பேட்டி ரஜினி ரசிகர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. குறிப்பாக, விஜய் தேவர் கொண்டாவின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கேட்டதும், ஆவேசமடைந்த சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், “எங்க வந்து யாரை பற்றி தப்பா பேசுற, ரஜினி பற்றி உனக்கு என்ன தெரியும், உங்க படம் ஏன் ஓடவில்லை என்று கேட்டால் அதற்குத்தான் பதில் சொல்ல வேண்டும்.
அதைவிட்டு விட்டு ரஜினியின் 6 படம் பிளாப் என்று பேசக்கூடாது. அதுமட்டுமில்லாமல் எங்க தமிழ் நடிகர்களான ரஜினி, கமல், விஜய்யை பற்றி எப்படி நீங்க விமர்சனம் செய்யலாம், இப்படி எல்லாம் பேசுனா, உங்க படம் எதுவுமே தமிழ் நாட்டில் ஓடாது” என்று சரமாரியாக விஜய் தேவர் கொண்டாவை விமர்சித்துள்ளார். அதேசமயம், விஜய் தேவர் கொண்டாவின் சர்ச்சை பேச்சை கேட்ட தமிழ் சினிமா ரசிகர்களும் இணையத்தில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.