நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாதே, இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் கொரோனா தொற்று காரணமாக நடிகர் ரஜினிகாந்த உடல் நிலையை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு தாமதமானது. இதனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இந்நிலையில் அண்ணாத்தே எதிர்பார்த்த வசூலை பெற்று தராததால், மீண்டும் சன் பிக்சர் தயாரிப்பில் ஒரு படம் கால் சீட் கொடுக்க ஒப்பு கொண்டார் ரஜினிகாந்த்.
புதிய படத்துக்கான இயக்குனரை ரஜினிகாந்த் தேர்வு செய்தார், அதில் பல இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து ரஜினியின் புதிய படத்தின் இயக்குனரை மாற்றும் முடிவுக்கு வந்தது தயாரிப்பு நிறுவனம்.
ஆனால், இதில் ரஜினிகாந்துக்கு விருப்பம் இல்லை, நெல்சனை இந்த படத்தில் இருந்து வெளியேற்றினால் அவருடைய சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்பதால், படத்தில் கதையில் சில மாற்றம் கொண்டு வந்து படத்தை தொடங்கலாம் என நெல்சனுக்கு ஆதரவாக இருந்துள்ளார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து ரஜினியின் விருப்பம் இல்லாமல் இயக்குனரை மாற்றம் செய்வதில் சிக்கலை சந்தித்தது தயாரிப்பு நிறுவனம்.
இருந்தும் எப்படியாவது நெல்சனை தூக்கி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியது சன் பிக்சர், இதற்கு காரணம் அவருடைய இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தினால் சன் பிக்சர்க்கு ஏற்பட்ட நஷ்டம் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த நடிக்கும் புதிய படத்துக்காக ரூபாய் 226 கோடி பட்ஜெட் கொடுத்திருந்தார் இயக்குனர் நெல்சன். சமீபத்தில் நெல்சனை அழைத்து 150 கோடிக்குள் இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், முடியாது என நெல்சன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இது தான் வாய்ப்பு என இயக்குனர் நெல்சனை மாற்றம் செய்து விடலாம் என ரஜினிகாந்துக்கு தகவல் அனுப்பியுள்ளது சன் பிக்ச்சர், ஆனால் நெல்சன் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் அதனால் இயக்குனரை மாற்றம் செய்ய வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் டென்ஷனான தயாரிப்பு நிறுவனம்,நெல்சன் தான் வேண்டும் என்றால் அவர் சொந்த காசில் படம் எடுத்து நெல்சனை சினிமாவில் வாழ வைக்கலாமே என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நெல்சனை மாற்றுவதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருப்பதை அறிந்த ரஜினிகாந்த், இதற்கு மேல் நெல்சனுக்கு சிபாரிசு செய்தால் அவமானம் தான் மிச்சம் என உணர்ந்து, நெல்சன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்திற்காக AGS நிறுவனத்தை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது, அதே, வேலையில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நெல்சன் பதிலாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கலாம் என கூறப்படுகிறது.