லோகேஷ் கனகராஜை ஏலம் எடுப்பதில் தயாரிப்பார்களுக்குள் கடும் போட்டி….. சம்பளம் இத்தனை கோடியா.?

0
Follow on Google News

கோவையில் எம்பிஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்த லோகேஷ் கனகராஜ் சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆர்வமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக பங்கேற்ற ஷார்ட் பிலிம் காம்பெடிஷன் நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார், அப்போது அவருடைய ஷார்ட் பிலிம் அங்கே போட்டியிலே நடுவராக இருந்த கார்த்திக் சுப்புராஜ் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் அவியல் என்கின்ற படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்தார் கார்த்திக் சுப்புராஜ். அதன் பின்பு கைதி திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான அறியப்பட்ட லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து மாஸ்டர், விக்ரம் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி நடிகர்களிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் செல்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து நம்ம ஒரு படம் சேர்ந்து பண்ணலாம் என தெரிவித்தவர் அதற்கான லோகேஷ் கனகராஜ்க்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளார்.

ஆனால், லோகேஷ் கனராஜ் எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுவிட்டார். இந்நிலையில் தற்பொழுது சென்னையில் லியோ படப்பிடிப்பில் இருக்கும் லோகேஷ் கனகராஜை மீண்டும் நேரில் அழைத்து பேசிய ரஜினிகாந்த, அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த – லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தை யார் தயாரிப்பது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.அந்த வகையில் தயாரிப்பாளர் தில் ராஜ் சமீபத்தில் ரஜினியை சந்தித்து நீங்க என்ன சம்பளம் கேட்டாலும் தருகிறேன். எனக்கு இந்த ப்ரொஜெக்ட்டை தாங்க என்று கேட்டுள்ளார், அதே போன்று தயாரிப்பளார் லலித் மற்றும் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை தயாரிக்கும் சன் பிக்ச்சர் ரஜினி – லோகேஷ் ப்ரொஜெக்ட்டை எடுப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேலும் ஏற்கனவே கே ஜி எஃப் படத்தை தயாரித்த கொம்பாலய்யா மூவிஸ்க்கு ஒரு படம் செய்து தருவதாக லோகேஷ் கனகராஜ் கமிட்டாகி இருந்தார். அதனை தொடர்ந்து தற்பொழுது கொம்பாலாயா மூவிஸ் லோகேஷ் கனகராஜ் தொடர்பு கொண்டு லோகேஷ் இயக்கம் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை எங்களுக்கு தர வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.

இதே போன்று RRR படத்தை தயாரித்த நிறுவனமும் இந்த போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த இந்த படத்துக்காக 30 கோடி சம்பளம் தருவதாக லோகேஷ் கனகராஜிடன் தெரிவித்த நிலையில், தபொழுது இந்த ப்ரோஜெட்டை எடுத்தே தீர வேண்டும் என கடும் போட்டியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜை ஐபிஎல் போட்டிக்கு ஏலம் எடுப்பது போன்று ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் சம்பளத்தை அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது கேஜிஎப் படத்தை இயக்கிய கொம்பாலய்யா நிறுவனம் 60 கோடி வரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தருவதற்கு முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது நம்பர் ஒன் இயக்குனராக இருந்தாலும், படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை முடிவு செய்யக்கூடியது அந்த படத்தின் ஹீரோ கைகள் இருப்பதால், இந்த படத்தை யார் தயாரிக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் தான் முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.