இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெற்று தந்தது. இப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இப்படத்தையடுத்து, இயக்குனர் லோகேஷ் ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ எடுக்கப்போவதாகவும், கதை எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷுக்கு கரராக கண்டிஷனை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களுக்கு கதை எழுதுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இயக்குனர் எழுதும் கதையில் பல மாற்றங்களை செய்து, இது வேண்டாம் அது வேண்டாம் என்று கண்டிஷன் போட்டு தான் படத்தில் நடிப்பார்கள். அந்த வகையில், தற்போது ரஜினி போட்டிருக்கும் கண்டிசனால் கதையை எப்படி நகர்த்திக் கொண்டு போவது என்று தெரியாமல் லோகேஷ் கனகராஜ் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.
மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் லோகேஷ். இவர் விறுவிறுப்பான திரைக்கதை எழுதுவதில் திறமை வாய்ந்தவர். இவர் நடிகர் கார்த்தியை வைத்து எடுத்த கைதி படம் இவருக்கு எதிர்பாராத வெற்றியைப் பெற்றுத் தந்தது. இவரது பிலிம் மேக்கிங் திறமையைப் பார்த்து திரையுலகப் பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் ஆச்சரியப்பட்டனர்.
கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து, தனக்கு மிகவும் பிடித்த நடிகரான உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்தது. எனவே, விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு கம் பேக் படமாக அமைந்தது. கைதி படத்தில் நடித்த முக்கிய காதாப்பாத்திரங்கள் சில விக்ரம் படத்தில் தோன்றியதால் LCU என்ற கான்செப்ட் ரசிகர்கள் மத்தியில் பிரபலாமாகத் தொடங்கியது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் LCU கான்செப்ட் இருந்தது. இப்படி தன் திறைமை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க உள்ளார். மேலும், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. நடிகர் ரஜினி காந்த் இப்போது ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ‘தலைவர் 171’ படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் லோகேஷ் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷிடம் சில கண்டிஷன்கள் போட்டிருக்கிறாராம். அதாவது இதற்கு முன்பு லோகேஷன் படத்தில் நடித்தவர்கள் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க கூடாது என்றும், முக்கியமாக LCU கான்செப்ட்டை இந்த படத்தில் கொண்டு வரவே கூடாது என்றும் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருக்கிறாராம்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிருக்கும் இயக்குனர் லோகேஷ் , ரஜினிக்காகவே ஒரு கதையை ரெடி பண்ண வேண்டும் என்று ரஜினிக்கு ஏற்றவாறு கதையை யோசித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாகவே, இயக்குனரின் போக்கிற்கு கதையையும் படத்தையும் முடித்துக் கொடுத்தால் மட்டுமே அப்படம் வெற்றி பெறும். அப்படி இருக்கையில் இடையில் ஹீரோக்கள் கதையில் மாற்றம் செய்யும்போது படம் சொதப்பி விடும் என்பது ரசிகர்களின் கருத்து. ரஜினி- லோகேஷ் கூட்டணி அதற்கு விதிவிலக்கா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.