சொன்னா சொன்ன படி செய்யனும்… கொடுத்த வாக்கை ரஜினியே மீறலாமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. பாசிடிவ் விமர்சனங்கள் வெளிவந்தன. ரஜினிகாந்துடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் என ஒட்டு மொத்த ஸ்டார்களும் கவுர தோற்றத்தில் நடித்திருந்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்தது ஜெயிலர் திரைப்படம்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் வசூலில் மாபெரும் சாதனை செய்துள்ளது. தமிழ் சினிமாவில் வரலாற்றில் முதன் முறையாக ஜெயிலர் திரைப்படம் செய்த சாதனை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் 12 நாள் முடிவில் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 550 கோடி வசூலை தாண்டி இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏற்கெனவே தயாரிப்பாளர் கலாநிதி மாறம் வசூல் மன்னன் ரஜினிகாந்த் என புகழாரம் சூட்டியிருந்தார். அதுபோலவே நடந்து விட்டது. அதுமட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தனது குடிப்பழக்கத்தை பற்றி பேசி இருந்தார்.

ரஜினி பேசுகையில், “நண்பர்களே ஒன்னு சொல்றேன். அந்த குடி பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்ப இருக்கிற ரஜினிகாந்த் ஒன்னுமே இல்லை. இன்னும் எங்கயோ இருந்திருப்பேன். சினிமாவில் மட்டும் இல்லை. சமுதாயத்துக்கும் எவ்வளவோ நல்லது பண்ணியிருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வச்சுக்கிட்ட சூனியம்.

அதனால் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சொல்கிறேன். தினமும் குடிக்கிறதை வச்சுக்காதீங்க. அதுக்காக குடிக்கவே வேண்டாம் என சொல்ல வரவில்லை. நாமென்ன புத்தரா, சங்கராச்சார்யார்களா இல்லை யோகிகளா. குடிங்க, எப்போதாவது 10 நாட்களுக்கு 1 தடவை. அது ஜாலியா இருக்கும். தினசரி குடிச்சால், அது இல்லை என்கிற போது கஷ்டமா இருக்கும். அதனால் உடல் மட்டும் அல்ல மூளையும் கெட்டுப் போய்விடும்.

நாம் எடுக்கிற முடிவும் தப்பு தப்பா போய்டும். வாழ்க்கையே வீணாக போய்விடும். அந்த குடிப் பழக்கத்தினால் உங்களையும் தாண்டி உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கஷ்டப்படுத்தி, அவர்களையும் நரகத்துக்கு தள்ளி விடுறீங்க. அவங்கள கஷ்டப்படுத்துறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. அதனால் விட்டுவிடுங்க. அது ஒன்றும் கஷ்டமில்லை. அனுபவசாலி சொல்கிறேன். குடிக்கிற நண்பர்களை சந்திக்காதீங்க.

குடிக்கிற அந்த சமயத்தில் வயிறு நிறைய சாப்பிடுங்க. நல்லா சாப்பிட்டு ஏதாவது படம் பாருங்க. 10 அல்லது 12 நாளில் சரியாகிடும். தயவு செய்து அதை விட்டுவிடுங்கள்” என உருக்கமாகப் பேசி இருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ரஜினி என்னுடைய நண்பர். ஆனால் அவர் செய்வதெல்லாம் சரி இல்லை.

ஆடியோ லான்ச்சில் யாரையும் குடிக்க கூடாது என்று கூறிவிட்டு ஜெயிலர் படத்தில் சுருட்டினை எடுத்து ஸ்டைலாக புகை பிடிக்கிறார். என் நண்பராக இருந்தாலும் ரஜினி செய்தது தவறு தவறுதான். இது யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது ஜெயில்ல படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அது எனக்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை தவிர்த்து இருந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.