நடிகர் ரஜினிகாந்த் சம்பாரித்த சொத்துக்களை பாதுகாத்தால் மட்டுமே அவருடைய இரண்டு மகள்களும் ஆஹா..ஓஹோ..என்று வாழலாம், ஆனால் இரண்டு மகள்களும் போட்டி போட்டு கொண்டு ரஜினிகாந்த் சம்பாரிக்கும் பணத்தை அழித்து கொண்டு வருகிறார்கள் என்றே சொல்லலாம். மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில், 3 படம் எடுத்து மிகப்பெரிய நஷ்டம், இதனை தொடர்ந்து மியூசிக் ஆல்பம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று வீண் செலவு செய்துஐஸ்வர்யா ஒரு பக்கம் தந்தையின் பணத்தை ஐ காலி செய்து கொண்டிருக்கையில்,
மறுபக்கம் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து அனிமேசன் படம் எடுக்க விரும்பி பெரிய பட்ஜெட்டில் கோச்சடையான் படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை தந்தை ரஜினிகாந்துக்கு பரிசளித்தார் சௌந்தர்யா. இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பெரும் நஷ்டம், இத்துடன் சினிமா பக்கமே வர கூடாது என தந்தை தெரிவிக்க, அடுத்ததாக பல கோடி முதலீட்டில் ஹூட் என்கிற செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.
இது பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று தானும் ஒரு தொழில் அதிபர் என பெயர் பெற்று விடலாம் என நினைத்த சௌதார்யாவுக்கு பெரும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது அக்கா ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்து லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தங்கை சௌதர்யாவும் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார், ஆனால் இம்முறை இயக்குனராக இல்லை தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் சௌந்தர்யா. இந்திய சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பேன் இந்தியா படங்களான பாகுபாலி, பொன்னியின் செல்வன், கே ஜி எஃப் போன்ற மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் போன்று பேன் இந்தியா படத்தை தயாரிக்க முடிவில் சௌந்தர்யா தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் புதிய படத்தின் வேலைகளை தொடங்கியுள்ள சௌந்தர்யா அந்தப் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் இதெல்லாம் தேவையில்லை என்று மகளுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் சௌந்தர்யா கேட்பதாக இல்லை.
மேலும் பிரபல இயக்குனர்கள் சங்கர், ராஜமௌலி, மணிரத்தினம் போன்றோர்களை நம்பி பல கோடி முதலீடு செய்யலாம், ஆனால் மலையாள படத்தில் ஒரு சாதாரண எழுத்தாளரை நம்பி மிகப்பெரிய பட்ஜெட்டில் ஃபேன் இந்தியா படம் எடுக்க போவதாக சௌந்தர்யா தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளது ரஜினிக்கு சற்றும் விருப்பமில்லை என்றும் இதனால் மகள்களின் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியில் உள்ள ரஜினிகாந்த்,
தான் சம்பாரித்த பணத்தை இரண்டு மகள்களும் போட்டி போட்டு அழித்து விட்டு என்னை நாடு ரோட்டில் நிறுத்த போகிறார்கள் என வேதனையுடன் தனக்கு நெருக்கமான குடும்ப நண்பர் ஒருவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.