ஓடுகின்ற குதிரையை தேடி பிடித்து அதன் மீது சவாரி செய்து வருகிறார் ரஜினிகாந்த், அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றியால் அவருடைய இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சினிமா என்னும் பந்தயத்தில் முதல் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்த ரஜினிகாந்த், நம்ம ஒரு படம் பண்ணலாம் ஒரு கதை ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்துள்ளார், இந்த சந்திப்பு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்வதற்கு முன்பு நடந்துள்ளது.
ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு, கைதி 2, அதை முடித்துவிட்டு கமல் சார் உடன் ஒரு படம் என தனக்கு அடுத்தடுத்து கமிட் மென்ட் இருப்பதால் இப்போதைக்கு நம்ம சேர்ந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை என ரஜினியிடம் நேரடியாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜை கன்வின்ஸ் செய்ய முயன்ற ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்க 30 கோடி சம்பளம் என மிக பெரிய தொகையை தெரிவித்துள்ளார் ரஜினி. அதற்கு லோகேஷ் கனகராஜ் யோசித்து சொல்கிறேன் என எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் விடைபெற்றுள்ளார்
இதே போன்று ஹிந்தியில் இயக்குனர் நடிகர் சல்மான்கானிடமிருந்து லோகேஷ் கனகராஜ்க்கு அழைப்பு வந்ததாகவும் அவர் தன் தன்னை வைத்து லோகேஷ் இயக்கும் படத்திற்கு 50 கோடி சம்பளம் தருவதாக சல்மான்கான் ஆஃபர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ள லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து பேசிய ரஜினிகாந்த், ஏற்கனவே பேசிய புதிய படம் குறித்த ஆலோசனை நடத்தியுள்ளார், இதில் சுமுக முடிவு எட்டப்பட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.