இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த படம் மூன்று முடிச்சும் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், அடுத்தடுத்து நடிகர் கமல்ஹாசன், சிவகுமார், ஜெய்சங்கர், விஜயகுமார் போன்ற நடிகர்களுடன் இரண்டாம் கதநாயகனாக நடித்தார். இதில் கமல்ஹாசன் உடன் மட்டும் சுமார் 7 படங்கள் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த்.
50 படங்கள் வரை நடித்த ரஜினிகாந்த் தனித்துவமான ஒரு நடிகராக அங்கீகாரம் பெறவில்லை. இந்நிலையில் 1979ம் ஆண்டு மட்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் மூன்று, இதில் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் தாயில்லாமல் நான் இல்லை என்ற படம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ரஜினி இனி நம்ம இருவரும் இணைந்து படம் பண்ண கூடாது, அப்படி நம்ம தொடர்ந்து இணைந்து நடித்தால் நீங்க சினிமாவில் வளர முடியாது என்கிற கமல் ஆலோசனை கேட்டு தனியாக நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த்.
அடுத்த வருடம் 1980ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படம் மிக பெரிய ஹிட். இதன் பின்பு குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரானார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் ரஜினி – கமல் ரசிகர்கள் இடையில் போட்டி உருவெடுக்க, இருவரும் அடுத்தடுத்து உச்சத்துக்கு சென்று கொண்டே இருந்தனர். சினிமாவில் போட்டி இருந்தாலும் இருவருக்கும் இடையிலான நட்பு சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு சமீபத்தில் தீடிரென நடந்துள்ளது. இது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்துக்கான சந்திப்பு என்று தகவல் வந்தது, ஆனால் அந்த செய்தி தவறு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் நடிப்பதை விட மற்ற நடிகரை வைத்து புதியதாக படம் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் புதிய படங்கள் ஏதும் அவர் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் இண்டெர்னஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டுள்ளார் கமல்ஹாசன், முதலில் ஒப்பு கொண்ட ரஜினிகாந்த், பின்பு கமல்ஹாசன் உடன் இணைந்து மகேந்திரன் தயாரிப்பதை அறிந்து, நீங்க என் நண்பர் உங்களுக்கு கால் சீட் கொடுக்கிறேன். ஆனால் மகேந்திரன் இடையில் வருவது எனக்கு விருப்பம் இல்லை என கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க ரஜினிகாந்த் பின்வாங்கியுள்ளார்.
இதற்கு ரஜினியிடம் விளக்கம் கொடுத்துள்ளார் கமல், அதாவது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் மகேந்திரன் ஒரு பட்டனர் என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரு வழியாக கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு பின் இணையும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம் முடிந்ததும் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.