ரஜினி மாதிரி முட்டு கொடுக்க மாட்டேன்… உறுதியாக இருக்கும் விஜய்..

0
Follow on Google News

சமீபத்தில் நடிகர் விஜய் நடத்திய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் பேசிய அரசியல் பேச்சுகள் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை ரகசியமாக இரண்டு முறை விஜய் ரகசியமாக சந்தித்து, தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள சில மூத்த அரசியல் தலைவர்கள், அரசியல் சார்ந்த இலக்கியவாதிகள் என பலரின் ஆலோசனையை தொடர்ந்து நடிகர் விஜய் கேட்டு தன்னுடைய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து சென்று வருகிறார். அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு வருவதால் எந்த கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர் தன்னுடைய அரசியல் கட்சி தொடங்கி முழுமையாக அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்கிறார் என்பதை பொறுத்துதான் இனி வரும் காலங்களில் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் விஜய் அரசியல் அறிவிப்பை எது வரை எந்த கட்சியும் எதிர்க்காமல் இருந்து வருகிறார்கள், இதற்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்கிறார், அவருடைய அரசியலுக்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு உள்ளது என்பதை பார்த்துவிட்டு, அவருக்கு எதிரான அரசியலை செய்யலாம் என பொறுமையுடன் இருந்து வருகிறது தமிழக அரசியல் கட்சிகள்.

மேலும் விஜய் துணித்து அவருடைய அரசியல் முன்னெடுப்புகளை அதிரடியாக எடுத்து வைப்பதற்கு பின்னால், அதிகார மிக்க சக்தி உள்ளது என்றும், விஜய் அரசியல் கட்சி தொடங்கி , தேர்தலை நோக்கி நெருங்கும் போது, அவர் பின்னால் இருந்து செயல்படும், அதிகார மிக்க சக்தி எது என்பது அப்போது வெளிப்படும் என்கின்றனர், விஜயின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.

இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று தகவல் வந்து வெளியான நிலையில், அவருக்கு ஆலோசகராக இருக்கின்றவர்கள் 2024 வேண்டாம், அது உங்களுக்கான தேர்தல் யில்லை, 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கலாம் என்று அறிவுறுத்தியதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் களம் இறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், நாம் ஏன் யாரோ ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும், நாமே தனித்து போட்டியிடுவோம் என்கிற முடிவில் இருக்கும் விஜய். கடந்த காலங்களில் அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வர மாட்டேன் என தெளிவாக எந்த ஒரு அறிவிப்பை வெளியிடாமல், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப விருப்ப கட்சிக்கு வாய்ஸ் கொடுத்து வந்தார் ரஜினி.

ஒரு முறை ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவுக்கு வாய்ஸ் கொடுத்து திமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தார். மற்றொரு முறை நாடாளுமன்ற தேர்தலின் போது என்னுடைய ஒட்டு பாஜகவுக்கு ஆனால் என்னுடைய ரசிகர்கள் அவர்கள் விருப்பபட்ட கட்சிக்கு ஓட்டு போடலாம், ஆனால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சிக்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என ரஜினி வாய்ஸ் கொடுத்தார்.

இப்படி ஒவ்வொரு முறையும் வாய்ஸ் கொடுக்கிறேன் என்று, எதாவது ஒரு கட்சிக்கு ரஜினி போன்று கூஜா தூக்கி அந்த கட்சிக்கு முட்டு கொடுக்காமல், அதிரடியாக நேரடியாக களத்தில் இறங்கி தேர்தலை சந்திப்போம் என முடிவு செய்துள்ள விஜய், நம் தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க வரும் அரசியல் கட்சியை இணைத்து கொள்வோம் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.