நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் செய்த சாதனைகள் என்பது, அவருடைய காலக்கட்டத்தில் இருக்கும் நடிகர்களும், அவருக்கு அடுத்த கலக்கட்டத்தில் இருக்கும் விஜய் , அஜித் போன்ற நடிகர்களுக்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சினிமாவிற்கு அவர் கொடுத்த லாபங்கள் மிகப்பெரியவை. சினிமா துறையில் பலரின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தியவர் ரஜினிகாந்த்.
ரஜினி படத்தை தன்னுடைய திரையரங்கில் வெளியிட்ட சாதாரண திரையரங்கு உரிமையாளர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டும் அளவுக்கு ரஜினி படம் மிக பெரிய லாபத்தை திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெற்று தந்துள்ளது. அதேபோன்று கடும் சிரமத்திற்கு மத்தியில் ரஜினிகாந்த் நடித்த படத்தை வட்டிக்கு வாங்கி விநியோகம் செய்த எத்தனையோ விநியோகஸ்தர்கள் பெரும் தயாரிப்பாளர்களாக உருவெடுக்கும் அளவிற்கு பெரும் லாபத்தை பெற்று கொடுத்துள்ளது ரஜினிகாந்த் நடித்த படங்கள்.
இப்படி ரஜினிகாந்தால் பொருளாதாரத்தின் உயர்ந்தவர்கள் சினிமா துறையில் ஏராளமானோர். அந்த வகையில் சினிமாவை பொருளாதார ரீதியில் ரஜினிகாந்த் உயர்த்தியது மட்டுமில்லை, இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அஜித் விஜய் உட்பட அனைவருமே ரஜினியை பின்பற்றி சினிமாவில் அவருக்கான ஒரு இடத்தை பிடித்தவர்கள். அஜித் , விஜய் போன்ற நடிகர்கள் அவர்களுடைய ஆரம்ப கட்ட சினிமாவில்,
ரஜினிகாந்தை புகழ்ந்து வசனம் பேசுவது, அவர்கள் பாடல் வரிகளில் ரஜினிகாந்த பெயர் இடம்பெறும் வகையில் செய்வது, என ரஜினிகாந்த் இமேஜை பயன்படுத்தி அவர்களை அடையப்படுத்தியது தமிழ் சினிமா அறிந்த விஷயம். அதற்கு அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் நடித்த படங்களில் ரஜினிகாந்தை புகழ்ந்து இடம்பெற்ற காட்சிகளே சாட்சி.
தான் என்பது அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த படங்களில் தங்களின் பட விளம்பரத்திற்கும் தங்கள் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரஜினியை புகழ்ந்து வசனம் பேசுவது பாடல்களில் ரஜினியை புகழ்வது என்கின்ற பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது சாட்சி இன்றளவும் சாட்சி அந்த வகையில் மிக பெரிய உயரத்தில் இருக்க கூடிய ரஜினிகாந்த், அவருடைய உயரத்தில் இருந்து விஜய் போன்ற நடிகர்களை குனிந்து நமக்கு இவர் போட்டியா என்று பார்ப்பதே அவரை அவரே தாழ்த்தி கொள்ளும் செயல் என்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வைகையில் அமைத்துள்ளதாக மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில். இந்த பாடல் வரிகள் ரஜினிகாந்த் கவனத்துக்கு செல்லாமல் இடம்பெறுதற்கு வாய்ப்பே இல்லை, மேலும் அந்த பாடலை எழுதிய சூப்பர் சுப்பு பேட்டி ஒன்றில், தான் எழுதிய பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது என ரஜினிகாந்த் பாராட்டியதாகவே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் கவனத்திற்கு சென்ற பின்பு அவர் ஒப்புதலுடன் தான் ஜெயிலர் படத்தில் அந்த பாடல் வரி இடம்பெற்று இருக்கும். இந்த பாடலை இசை அமைத்த அனிரூத், மற்றும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ஆகியோர் ஆர்வக்கோளாறில் விஜய்யை சீண்டுவது போன்று பாடலை தயார் செய்து இருந்தாலும், நான் விஜய்யுடன் சரிக்கு சமமாக மல்லு கட்டுவதா என ரஜினிகாந்த் அந்த பாடல் வரிகளை புறக்கணித்து இருக்க வேண்டும்.
ஆனால் ஆர்வ கோளாறில் அனிருத்,மற்றும் சூப்பர் சுப்பு செஞ்ச செயலை ரஜினிகாந்த் அனுமதித்து, அவரை பார்த்து பின்பற்றி சினிமாவுக்கு வந்த விஜய்யுடன் போட்டி போடும் அளவுக்கு தன்னை தானே தாழ்த்தி கொண்டு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டார் ரஜினிகாந்த் என்கிற விமர்சனமும் எழுந்து வருவது குறிப்பிடதக்கது.