சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பொதுவாக இது ரஜினிகாந்த் படம் இல்லை இயக்குனர் ஞானவேல் ராஜ் படம் என்கிற விமர்சனத்தை பெற்றது. மேலும் எப்படி இப்படி ஒரு கதையில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டார் என்கின்ற கோபமான பல விமர்சனங்கள் ரஜினிகாந்தை நோக்கி எழுந்தது. காரணம் ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கையின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிராக இருந்தது இந்த வேட்டையன் திரைப்படம்.
பொதுவாகவே இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் ஞானவேல் ராஜ் போன்றோர் தாங்கள் நினைக்கும் கொள்கை மற்றும் சித்தாந்தங்களை ஒரு நடிகர் மூலமாக திணிக்க முற்படுவார்கள், அப்படி ஞானவேல்ராஜ் இயக்கிய ஜெய் பீம் படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரே முடிந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு ஞானவேல் ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் கொண்டு சென்று விட்டது,
ஜெய் பீம் படத்திற்கு அடுத்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்கின்ற அளவிற்கு மக்கள் கடுமையான எதிர்ப்புகளை சூர்யாவுக்கு தெரிவித்து மக்களின் பலம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை படுதோல்வி அடையச் செய்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர் மக்கள்.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் சூர்யா – ஞானவேல் ராஜா கூட்டணியில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மனம் புண்படி அமைக்கப்பட்ட சில காட்சிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் OTT யில் வெளியாகி வெற்றி பெற்றாலும் கூட, அடுத்து சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படத்தை மக்கள் புறக்கணிக்க தொடங்கினார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ள ஞானவேல்ராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்ட போதே சில விமர்சனங்கள் இருந்தது. அதாவது ஞானவேல் ராஜ் மனதில் இருப்பதை ரஜினியை மூலம் திணிக்கப்போகிறார் என்கிற விமர்சனம் ஏற்கனவே இருந்தது, அதற்கேற்றாற் போல் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் ஞானவேல் ராஜா தன்னுடைய கருத்தை ஆழமாக சொல்லும் படமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியான வேட்டையின் திரைப்படத்தில் என்கவுண்டருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது ரஜினிகாந்த் பணத்திற்காக எந்த கதையில் வேணாலும் நடித்து விடுவாரா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களையே இந்த படத்தை விரும்பவில்லை. இந்த நிலையில் பண்டிகை நாட்களில் வெளியானதால் வேட்டையன் தப்பித்துக் கொண்டது என்று சொல்லும் அளவிற்கு இந்த படம் வசூல் அமைத்துள்ளது.
படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின்னர் கனமழை காரணமாக வசூல் அடிப்பட்டது. இது குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல காட்சிகள் மிகவும் குறைவான காட்சியே திரையிடப்பட்டது. மழை ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால், தியேட்டரிலும் ஓரளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் படம் முதல் 8 நாட்களில் ரூபாய் 280 கோடிகளில் இருந்து ரூபாய் 285 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பொய்ந்த கனமழை வேட்டையன் வசூலுக்கு ஆப்பு வைத்து விட்டது என்று சொல்ல முடியாது படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை, இதற்கு காரணம் இது ரஜினிகாந்த் படமாக இல்லை என்பது தான் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.