இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்தான் தங்களது ரோல் மாடல் என சினிமாவில் சாதித்த பல நடிகர்கள் கூறிவருகின்றனர். இவரது நடிப்பில் கடைசியாக சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படம் வெளியானது.
வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்துவந்த ரஜினிகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாகவே அவருடைய படங்கள் சரியில்லாமல் இருந்தது. அவர் ஜெயிலருக்கு முன்னர் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த்தின் கதை முடித்துவிட்டதாக பலரும் கூற ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் வெளியாகி பெரும் ஹிட்டடித்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு இருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது இவர் விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென அரசியலிலும் குதித்தார். நடிப்பு, அரசியலைத் தாண்டி தன்னுடைய செயல்பாடுகளால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அவர் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் பலருக்கு சிரிப்பு வரும்படி அமைந்தது.
தற்போதைய இவர் கொடுத்த ஒரு பேட்டி ஒன்று இணையத்தில் அவ்வாறு வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில்,”நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் தான். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோவாகவும் சூப்பர் ஸ்டார்வும் இருக்கிறார் என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
ரஜினிகாந்த் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்வார் என்று நினைத்தேன் ஆனால் நான் நினைச்சது எதுவுமே நடக்கல என்பதுதான் எனக்கு கோபம். கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் தான் இறந்துவிட்டார். ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை மறக்கவில்லை. அவர் மீது அதிகமாக பாசமாகவும் நன்றியோடும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களுக்கு செய்த உதவிகள் தான்.
புனித் ராஜ்குமார் செய்த உதவியால்தான் அவரை மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டாடுகிறார்கள்.” என்று பேசிய மைசூர் அலிகான், மேலும், “தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. நான் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோ நிஜத்தில் அல்ல. அது தான் எனக்கு பிரச்சனை” என்றும் பேசிய மன்சூர் அலிகான்.
ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்தது எல்லாம் கர்நாடகாவில் தான் சேர்த்தார்.தமிழகத்தில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஏதாவது ஒன்றை செய்து இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை, அதைத்தவிர அவர் பின்னாடி ஆன்மீகம் என்ற பெயரில் வந்த இளைஞர்களை அகோரிகளாய் மாற்றி விட்டார் என ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “சிங்கம் சிங்கிளாக வரும் என்று கூறிவிட்டு பாட்ஷா படத்தில் இருவது பேருடன் வருகிறார். பன்றிகள் கூட்டமாக வரும் என்று கூறுகிறார். இவரின் படத்தை பார்க்க மக்கள் கூட்டமாக திரையரங்கிற்கு செல்கின்றனர். அப்போ அவர்களையெல்லாம் பன்றி என்று கூறுகிறாரா. ரஜினி எப்போதும் பணக்காரர்கள் பக்கம் தான் நிற்பார். யாரோ சொல்வதைக் கேட்டு தான் அவர் நடக்கிறார். ஏழைகள் பக்கம் நிற்க மாட்டார்” ரஜினி அரசியலில் ஒரு சுண்டைக்காய் என்பதை 27 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டேன்’ என்றும் பேசியுள்ளார்.