விஜய்க்கு இருக்கும் துணிவு ஏன் ரஜினிக்கு இல்லை.. எதற்கு ரஜினிக்கு இப்படி ஒரு பயம்..

0
Follow on Google News

நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்கின்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு. மீண்டும் அஜித் நடிப்பில் ஒரு படம் இயக்குவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கான வாய்ப்பு நடிகர் அஜித்திடம் இருந்து வரவில்லை என்று கூறப்படுகிறது. நடிகர் அஜித் காக கதையை தயார் செய்து அஜித்தை சந்திக்க பலமுறை வெங்கட் பிரபு முயற்சித்துள்ளார்.

ஆனால் வெங்கட்பிரபுவை சந்தித்து கதை கேட்க கூட அப்பாயின்மென்ட் தரவில்லை அஜித் என கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் வெங்கட் பிரபு. இதனை தொடர்ந்து நடிகர் விஜயை சந்தித்து முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஒரு கதையை தெரிவித்து விஜய் படத்தில் கமிட் ஆகியுள்ளார் வெங்கட் பிரபு.

விஜய் படத்தில் வெங்கட் பிரபு கமிட்டான பின்பு ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் பார்வையும் மற்றும் மீடியாக்களின் பார்வையும் வெங்கட்பிரபு மீது விழுந்து உள்ளது. இதற்கு முன்பு வெங்கட்பிரபுவை பெரிதாக எந்த ஒரு மீடியாவும் பெரிதாக கண்டு கொள்ள கொள்வதில்லை. சமீபத்தில் பிரசாந்த் லேபுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த வெங்கட் பிரபுவை, அந்த பிரசாத் லேபில் செல்வதற்கான மூன்று வழிகளிலும் மீடியாக்கள் சுற்றி வளைத்து வெங்கட் பிரபு எந்த வழியாக வருவார் என காத்திருந்திருக்கிறார்கள்.

ஒரு வழியாக வெங்கட் பிரபுவை சுற்றி வளைத்த மீடியாக்கள், விஜய் படம் குறித்து அப்டேட் கேட்க, அவர் நைசாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். விஜய் படத்தில் கமிட்டானா பின்பு வெங்கட் பிரபுவின் செல்வாக்கு மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நடிகர் விஜய் நடிக்க இருக்கும் கதையை முதலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.

அதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மூலம் முயற்சி செய்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. கதையைக் கேட்ட நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அதை ரிஜெக்ட் பண்ணி விட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இந்த படத்தை ரிஜெக்ட் செய்ய முக்கிய காரணம் இது அரசியல் சார்ந்த படம் என்பதால், தனக்கு எதும் பிரச்சனை வந்துவிடுமோ என்கின்ற அந்த பயம்தான் வெங்கட் பிரபு சொன்ன கதையில் நடிக்காமல் ரஜினிகாந்த் ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக அரசியல் சார்ந்த படத்தில் நடித்தால் எதாவது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தரப்பில் இருந்து தனக்கு எதிர்ப்பு வரும் என்கிற பயத்தில், நமக்கு எதற்கு வம்பு, நாம் இருக்கும் இடம் தெரியாமல், யாரையும் பகைத்து கொள்ளாமல், அனைவருக்கும் நல்லவராக இருந்து, சர்ச்சை ஏற்படாத வகையில் கதைகளில் தேர்வு செய்து நடித்து விடுவோம் என வெங்கட்பிரபு சொன்ன அரசியல் கதையில் நடிக்க ரஜினி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரஜினி நடிக்க இருந்த முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமான வெங்கட் பிரபு படத்தில் விஜய் துணிந்து நடிக்க முன் வந்ததற்கு முக்கிய காரணம், விஜய் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பது தான். மேலும் ஏற்கனவே லியோ படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, அதற்கான பேச்சுவார்த்தையும் முடித்து எல்லாம் ஓகே ஆனது.

இந்த சூழலில் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்ட விஜய், உன்னை தான் செல்லம் தேடிட்டு இருந்தேன், இத்தனை நாளா எங்கய்யா இருந்த என்பது போல், மிக்க மகிழ்ச்சியில் அட்லீக்கு குட் பை சொன்ன விஜய் வெங்கட் பிரபு படத்தில் கமிட்டாகி உள்ளார்.அந்த வகையில் அரசியல் சார்ந்த கதைகளில் நடிக்க விஜய்க்கு இருக்கும் துணிவு ரஜினிக்கு இல்லை என்கின்றது சினிமா வட்டாரங்கள்