தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 70,80களில் இருந்தே தனக்கென ஒரு இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார் ரஜினி. வில்லனாக , துணை நடிகராக, ஹீரோவாக , ஸ்டாராக என படிப்படியாக முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இதுவரை தன்னை சூப்பர் ஸ்டார் என்று ஒரு போதும் வெளிப்படையாக காட்டிக்கொண்டதே இல்லை.
அவரின் இடத்திற்கு பல பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போட்டி போட்டார். காலப்போக்கில் அது நடக்காது என்று அவரும் ஓடி விட்டார். இன்னும் தொடர்ந்து பலர் தங்களை சூப்பர் ஸ்டார் என்று நிலைநாட்டிக் கொண்டே வந்தனர். யாராலயும் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை.
தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டு அரசியலில் குதிக்க தயாராகி வரும் விஜய். இவருக்கென்று தனிப்பட்டாளமே உள்ளது. இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பலர் கூறி வருகின்றனர். குறிப்பாக வாரிசுப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். விஜய் சிறிதும் மறுப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது, சரத்குமார் பேசியதை விஜய் வரவேற்பது போன்று அமைந்தது அந்த நிகழ்வு.
இப்படி ஆளு ஆளுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சூப்பர் ஸ்டார் பட்டைய கிளப்பி விட்டார். ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது ஹுக்கும் என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்து ரஜினியின் பாடல் முதலில் வெளியாகாமல் தமன்னா ஆடிய பாடலான காவாலா வெளியானது பலருக்கு ஏமாற்றமாக இருந்தது.
என்னதான் காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாஸான பாடலாக இல்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது. அந்த வருத்தத்தை ஹுக்கும் பாடல் போக்கியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தலைவருக்கு ஏற்ற தரமான ஒரு மாஸ் பாடலாக ஹுக்கும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. ஹுக்கும் பாடல் ஒருபக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மறுபக்கம் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இப்பாடலில் இடம்பெற்ற சில வரிகள் தான். பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஹுக்கும் பாடலின் மூலம் பலர் ரஜினி விஜய்யை தாக்கியுள்ளதாக கூறி வருகின்றனர். ரஜினி எந்த விழாவிற்கு சென்றாலும் தன் வாழ்க்கையில் நடைப்பெற்ற விஷயத்தையோ அல்லது எங்கோ கேட்ட கதையையோ ரசிகர்களிடம் கூறுவார்.
இதே பழக்கத்தை நடிகர் விஜய்யும் பின்பற்றி வருகிறார். இதே போன்று விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை பலரும் ரஜினி ஸ்டைல் மற்றும் கதாப்பாத்திரங்களை ரெஃபரன்ஸாக வைத்து ஆரம்பத்தில் நடித்து தங்களை அடையாளப்படுத்தி கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என சரத்குமார் பேசிய பின்பு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது என்று பலரும் நினைத்து வருகிறார்கள்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பே விஜய் அம்மா ஷோபா ஒரு நிகழ்வில் பேசுகையில் சூப்பர் ஸ்டார் விஜய் என குறிப்பிட்டது, அப்போது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. பின்பு விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தலையிட்டு பிரச்சனையை ஆப் செய்தார்.அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு விஜய் அம்மா பற்ற வைத்த சூப்பர் ஸ்டார் குறித்த சர்ச்சை தற்பொழுது பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூலை 28ம் தேதி ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மறைமுகமாக தக்க பதிலடி கொடுத்து பேசுவார் ரஜினிகாந்த் என்று எதிர்பார்க்கப்படுகிறது.