கேரளாவுக்கு அள்ளி கொடுத்த ரஜினி – விஜய்.. தமிழகத்திற்கு கிள்ளி கூட கொடுக்கவில்லை… திருந்தவர்களா கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்…

0
Follow on Google News

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்டுள்ளன, வரலாற்றில் சென்னையில் மக்கள் மிக மோசமாக பாதிப்பை சந்தித்தது. மக்களின் துயரத்தில் பங்கேற்று கை கொடுத்து தூக்குவோம், முடிந்ததை செய்வோம் என் தங்கள் சக்திக்கு அதிகமாகவே தொலைக்காட்சி மூலம் பிரபலமான கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர், மக்களுக்கு நேரடியாக சென்று தங்களான உதவிகளை செய்து வந்தனர்.

மேலும் களத்தில் இறங்கி மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அரசுக்கு நிவாரணம் கொடுத்து அரசாங்கம் செய்யும் நிவாரண பணியில் அரசுடன் கை கோர்க்கும் வகையில், நடிகர் பலர் அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிவாரணம் வழங்கி வந்தாலும் கூட, 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினி, விஜய், கமல், ஆகியோர் எவ்வளவு கொடுத்தார்கள் என்றால், பூத கண்ணாடி வைத்து தேடி தேடி பார்த்தாலும் ஒண்ணுமே செய்யவில்லை என்று சொல்லும் அளவுக்கு தான் உள்ளது.

இந்த நிலையில் உச்ச நட்சத்திரங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக காக்கா- கழுகு கதை சொல்லி சண்டை போடும் ரஜினி – விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்றோரின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் இந்த சென்னை வெள்ளம் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டும் அங்கே இருக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட போது, கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாயை அள்ளி கொடுத்தார்.

ரஜினிகாந்த் கேரள வெள்ள நிவாரண நிதியாக 15 லடசம். நடிகர் விஷால் 10 லட்சம். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், தனுஷ் ரூ.15 லட்சமும், சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சமும், விக்ரம் ரூ.35 லட்சமும் கொடுத்தனர். இதில் உச்சகட்டமாக நடிகர் விஜய் கேரளா நிவாரண நிதிக்கு ரூ.70 லட்சம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கேரளாவில் தங்களுடைய சினிமா மார்க்கெட்டை உயர்த்துவதற்காக, கேரள மக்கள் மனதில் இடம்பிடிக்க தங்களை கொடை வள்ளல் போன்று காண்பிக்க அள்ளி அள்ளி கொடுத்த ரஜினி, விஜய், போன்ற உச்ச நட்சத்திரம் சில உட்பட நடிகர்கள், சென்னை வெள்ளத்திற்கு கிள்ளி கூட தர மனம் இல்லாமல் இருக்க, தமிழக மக்கள் நம்ம செய்தாலும் செய்யவில்லை என்றாலும் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்துவிடுவார்கள் எண்ணத்தை இது உச்ச நட்சத்திர நடிகர்கள் மனதில் விதைக்க காரணமாக இருப்பது, சினிமா நடிகர்களை தலையில் வைத்து கொண்டாடும் மக்கள் தான் என்பதை மறுக்க முடியாது.

சென்னை வெள்ளத்தில் போது டிவீட்டரில் என்னுடைய ரசிகர்கள் அனைவரும் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ஒரு பதிவை போட்டுவிட்டு அத்துடன் தன்னுடைய கடமை முடிந்து விட்டது என விஜய் ஒதுங்கி கொள்ள, ஆனால் அவருடைய ரசிகர்களோ விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தி சோறு போடுவது விளம்பரம் செய்வது, குப்பை மேல் இருக்கும் குப்பையை அதே குப்பை மேல் போட்டு காமெடி செய்வதுமாக இருந்தது.

தமிழ்நாட்டில் பாதிப்பு என்றால் நான் அரசுக்கு எதற்காக வரி காட்டுகிறேன் என வீர வசனம் பேசும் கமல்ஹாசன் தான் கேரள வெள்ளத்தின் போது 25 லட்சம் ரூபாய் அள்ளி கொடுத்துள்ளார், கேரள வெள்ளத்தின் போது 15 லட்சத்தை அள்ளி கொடுத்த ரஜினிகாந்த் இதுவரை சமீபத்தில் நடந்த சென்னை வெள்ளத்தில் எவ்வளவு கொடுத்தார் என்கிற எந்த தகவலும் இல்லை..

அந்த வகையில் கேரள மக்களுக்கு அள்ளி கொடுத்த ரஜினி, விஜய், கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் தமிழகத்துக்கு கிள்ளி கூட இதுவரை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து இனிமேல் தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும் என்கிற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது, இந்த செய்தியை பார்த்து ரஜினி, விஜய் ரசிகர்கள் நாங்கள் எங்கள் தலைவர் ஆணைக்கிணங்க களத்தில் வேலை செய்தோம் என தெரிவிக்கலாம், ஆனால், நீங்கள் நேரம் செலவு செய்து உங்கள் செலவில் செய்யும் உதவியை, கள பணியை எதோ ஒரு ஏசி அரையில் இருக்கும் நீங்கள் தலைவராக கொண்டாடும் நடிகருக்கு எப்படி சேரும் என்பதை நீங்களும் உணர வேண்டும்.