தமிழின் மூத்த திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி அமரன் ஆவார். நடிகர் பிரேம்ஜி புத்தாண்டு தினத்தன்று “இந்த வருடம் எனக்கு கண்டிப்பாக கல்யாணம் ஆகும்” என்று எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டிருந்தார். இவரது இந்த ட்விட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், சும்மா காமெடி பண்றார் இன்று பலரும் தெரிவித்து இருந்தனர்.ஆனால், பிரேம்ஜிக்கு உண்மையில் கல்யாண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.
அதிலும் 46 வயதான பிரேம் ஜிக்கு 24 வயதான பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக பகிர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அந்த இளம் பெண் யார் என்று இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி மற்றும் மூத்த மகன் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு அது செட் ஆகவில்லை. எனவே நடிப்பதில் இருந்து விலகிய வெங்கட் பிரபு, சென்னை 600028 என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் அவரது தம்பி பிரேம்ஜியையும் நடிக்க வைத்திருந்தார்.அதில் அவர் நடித்திருந்து சீனு என்னும் கதாபாத்திரம் இவரை ஒரு நகைச்சுவை நடிகராக நிலை நிறுத்தியது. அதை அடுத்து, அவர் இயக்கிய பல்வேறு படங்களிலும் தம்பி பிரேம்ஜியை காமெடி நடிகராக நடிக்க வைத்தார்.
இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டில் வெளியான சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் ஹீரோயினியின் நண்பராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அப்படத்தில் அவர் பெரிய அளவில் மக்களிடையே ஜொலிக்கவில்லை. எப்போதும் அண்ணன் வெங்கட் பிரபு உடனே இருக்கும் பிரேம்ஜி, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2, மாநாடு என அடுத்தடுத்து அண்ணன் நீ இயக்கம் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் பிரேம்ஜி மற்ற ஹீரோக்களின் டயலாகுகளை காமெடியாக டெலிவரி செய்வதில் திறமை வாய்ந்தவர் என்று கூறலாம். உதாரணமாக, என்ன கொடுமை சார் இது மற்றும் எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா போன்ற டயலாக்குகள் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு நடிகர்கள் சொன்னவை ஆகும். ஆனால், இந்த டயலாகுகளை பிரேம்ஜி கூறும் விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.
இசையமைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட பிரேம்ஜி, அவரது பெரியப்பா மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பின்னணி பாடகராக பணியாற்றினார். மேலும் சில பாடல்களையும் ரீமிக்ஸ் செய்துள்ளார். 2008 இல் அகத்தியன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் தோழா ஆகிய படங்களின் மூலம் ஒரு சுயர்ச்சை இசையமைப்பாளராக ஆனார். தற்போது தமிழின் பின்னணி பாடகர், திரைப்பட இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகராக வலம் வருகிறார் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் அடிக்கடி ராப் பாடல்களையும் பாடி வருகிறார்.
இசையமைப்பதில் ஆர்வம் கொண்ட பிரேம்ஜி, அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு சரியான வயதில் கல்யாணம் முடிந்த போதிலும், பிரேம்ஜி 46 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் போட்ட பதிவு சோசியல் மீடியா முழுவதும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் சும்மா விளையாட்டுக்கு போஸ்ட் போட்டிருக்கிறார் என்று எண்ணி வந்த நிலையில், உண்மையில் அவருக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் அவர் தன்னைவிட வயதில் 22 வயது குறைந்த இளம் பின்னணி பாடகியான வினைதா சிவக்குமாரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில வருடங்களாக பிரேம்ஜி வினைதா சரத்குமார் இருவரும் காதலித்து வருகின்றனர் என்ற தகவலும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2021ல் வினைதா சிவக்குமார் தனது சோசியல் மீடியாவில் பிரேம்ஜியின் பிறந்த நாளன்று அவருக்கு காதல் சொட்ட சொட்ட எழுதிய வாழ்த்து மடல் இதனை உறுதி செய்துள்ளது. பிரேம்ஜி வினைதா சிவகுமாரை தான் திருமணம் செய்ய போகிறாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல்களை பிரேம்ஜி குடும்பத்தினர் வெளியிடவில்லை என்பதே உண்மை.