24 வயது பெண்ணை திருமணம் செய்யும் 44 வயது பிரேம்ஜி… எப்படி காதலில் விழுந்தார் பிரேம் ஜி தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி மற்றும் மூத்த மகன் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அது செட் ஆகவில்லை. எனவே நடிப்பதில் இருந்து விலகிய வெங்கட் பிரபு, சென்னை 600028 என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்தில் அவரது தம்பி பிரேம்ஜியையும் நடிக்க வைத்திருந்தார். அதை அடுத்து, அவர் இயக்கிய பல்வேறு படங்களிலும் தம்பி பிரேம்ஜியை காமெடி நடிகராக நடிக்க வைத்தார். எப்போதும் அண்ணன் வெங்கட் பிரபு உடனே இருக்கும் பிரேம்ஜி, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 28 பார்ட் 2, மாநாடு என அடுத்தடுத்து அண்ணன் இயக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் பிரேம்ஜி மற்ற ஹீரோக்களின் டயலாகுகளை காமெடியாக டெலிவரி செய்வதில் திறமை வாய்ந்தவர் என்று கூறலாம். உதாரணமாக, என்ன கொடுமை சார் இது மற்றும் எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா போன்ற டயலாக்குகள் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு நடிகர்கள் சொன்னவை ஆகும். ஆனால், இந்த டயலாகுகளை பிரேம்ஜி கூறும் விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.

இசையமைப்பதில் ஆர்வம் கொண்ட பிரேம்ஜி, அவரது பெரியப்பா மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பின்னணி பாடகராக பணியாற்றினார். மேலும் சில பாடல்களையும் ரீமிக்ஸ் செய்துள்ளார். இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டில் வெளியான சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் ஹீரோயினியின் நண்பராக நடித்துள்ளார்.அதன் பின்னரே அண்ணன் இயக்கம் படங்களில் வரிசையாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு சரியான வயதில் கல்யாணம் முடிந்த போதிலும், பிரேம்ஜி 44 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில், எனக்கு திருமணம் என சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் சும்மா விளையாட்டுக்கு போஸ்ட் போட்டிருக்கிறார் என்று எண்ணி வந்த நிலையில், உண்மையில் அவருக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரேம்ஜி ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்த பெண்ணுக்கு 24 வயது தான் என்றும், இருவரும் தங்கள் காதலை அவரவர் வீட்டில் தெரிவித்து சம்மதம் வாங்கி விட்டதால், செம்ம ஹாப்பியில் இருக்கும் காதல் ஜோடிகள், அதான் வீட்டிலே க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சே இனி என்ன தடை என புத்தான்டு அன்று தான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பிரேம் ஜி.

இந்த நிலையில் பிரேம் ஜி காதலித்த பெண்ணை இந்த வருடத்திற்குள் திருமணம் செய்யப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரேம்ஜியின் காதலுக்கு ஓகே சொல்லிய 24 வயது பெண் யார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த 24 வயது பெண் சினிமா நடிகையாக இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் மணமகள் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்களை பிரேம்ஜி குடும்பத்தினர் வெளியிடவில்லை என்றாலும், பிரேம்ஜியை திருமணம் செய்ய இருக்கும் அவரை விட 20 வயது குறைவான அவருடைய வருங்கால மனைவி யார் என பலரும் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.