நடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அந்தகண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த், நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பிரசாந்த் மட்டும் இடையில் சினிமாவில் பிரேக் எடுக்காமல் இருந்திருந்தால் இன்று விஜய் அஜித் போலவே அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருந்திருப்பார். அந்த அளவிற்கு 90களில் பிரசாந்துக்கு ரசிகர் மன்றங்கள் அதிகம் இருந்தன.
இவர் பிரபல இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் என்பதால், சண்டை பயிற்சியின் அட நம் குதிரை ஏற்றம் என்ற அனைத்து கலைகளையும் முறையாக கற்றுக்கொண்டு படங்களில் நடிக்க வந்தார்.1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பிரஷாந்த், அடுத்தடுத்து நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் இயக்குனர் ஷங்கர் மணிரத்தினம் போன்ற பெரிய இயக்குனர்களும் பிரசாந்தை தங்களது படங்களில் ஹீரோவாக நடிக்க வைத்தனர். பிரசாந்த் நடிப்பில் வெளியான ஆணழகன், ஜீன்ஸ், ஜோடி ,ஹலோ, பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
இப்படி பல மெகா ஹிட் படங்களை கொடுத்து டாப் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் பிரசாந்த் ஒய்யாரமாய் வலம் வந்தார் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவரின் அப்பா தியாகராஜன் தான். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குனர் என்பதால், எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும், எந்த கதாபாத்திரம் பிரசாந்துக்கு பொருத்தமாக இருக்கும் போன்றவற்றையெல்லாம் பார்த்து பார்த்து தேர்வு செய்து மகனை சினிமாவில் ஹீரோவாக வளர்த்து விட்டார்.
மேலும், மகனின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரகலட்சுமி என்கிற பெண்ணை பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களுக்குப் பிறகு தான் அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரசாந்துக்கும் அவரது தந்தை தியாகராஜனுக்கும் தெரிய வந்திருக்கிறது. பிரசாந்தின் சினிமா கரியரில் கவனமாக காயை நகர்த்திய தியாகராஜன், கல்யாணத்தில் கோட்டை விட்டுவிட்டார்.
தான் எடுத்த தவறான முடிவால்தான் தன் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று தியாகராஜன் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறாராம். இது குறித்து அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது கூறியிருக்கிறார். பிரசாந்தின் தந்தை பேட்டியில் பேசிய போது, என் மகனின் திருமணம் முடிந்து வெறும் 45 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில், அந்தப் பெண் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வலைக்கு சுமார் ஐந்து ஆண்டுகள் வரை நீதிமன்றத்தில் தொடர்ந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மகனுக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. சினிமாவைப் போலவே என் மகனை திருமண வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த பெண்ணை மணம் முடித்து வைத்தேன். ஆனால் என் மகனுக்கு ஏற்ற மருமகளை தேடும் விஷயத்தில் நான் தோற்றுப் போனேன்.” என்று கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.