வாழ்கை ஒரு வட்டம்… விஜய்க்கு உதவி செய்ய வேண்டிய இடத்திற்கு வந்த பிரசாந்த்…

0
Follow on Google News

90களில் தமிழ் சினிமாவில் டாப்ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய் அஜித் என இரண்டு ஹீரோக்கள் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்ததுடன் நிறைய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். பிரசாந்த் அதே வேகத்தில் தமிழ் சினிமாவில் இன்று வரை நீடித்திருந்தால் அஜித் விஜய்க்கு இணையாக வளர்ந்திருப்பார்.

ஆனால், இடையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். இதனால், அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடி கட்டி பறந்த பிரசாந்த், மார்க்கெட்டை இழந்த பிறகு தெலுங்கு மலையாள சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்ததுடன் தமிழ் சினிமாவில் மீண்டும் கம் பேக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான அந்தகன் படத்தின் மூலம் பிரசாந்த் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். இந்தப் படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி இருக்கிறார்.சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , சமுத்திரக்கனி , ஊர்வசி , யோகி பாபு , கே.எஸ்.ரவிக்குமார் , வனிதா விஜயகுமார் , மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியான அந்ததூண் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில், தியாகராஜன் அந்தாதுனின் ரீமேக் உரிமையை வாங்கினார். படத்தை எடுத்து முடித்தும் வெளியிட முடியாமல் சில வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டது.
மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் முதலில் வெளியானால் அந்தகன் படத்திற்கு நல்ல ப்ரமோஷன் ஆக அமையும் என்று பிரசாந்தின் அப்பா தியாகராஜன் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்தகண் படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது.ஒருவழியாக நான்கு ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய்யின் தி கோட் படத்திற்கு பிரசாந்த் தான் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய மகன் நடிக்கும் படம் என்பதற்காக தியாகராஜன் படத்தில் ஓவர் பில்டப் எதுவும் செய்யாமல் கதையை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார். ரீமேக் படம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் ஹீரோவாக நடித்து வெளியான படம் அந்தகன். படத்தில் ஹீரோவுக்கு பில்டப் கொடுத்து ஹீரோயின் காட்டாமல் மற்ற நடிகர் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் சில காட்சிகளில் பிரசாந்தை விட சிம்ரன் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். சில காட்சிகளில் வில்லி சிம்ரன் இடம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் பிரசாந்த் அடி வாங்குகிறார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் எதார்த்தமாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.இதனாலேயே அந்தகன் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.