90 காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த சினிமா காலகட்டத்தில் அதற்கு அடுத்தபடியாக விஜயகாந்த், நவரச நாயகன் கார்த்திக், ராமராஜன் என வெற்றி படங்களை இவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கையில், சினிமாவில் ஹீரோவாக தங்களுக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என நடிகர் விஜய், அஜித் இருவரும் போராடிக் கொண்டிருந்த காலம் அது.
ஆனால் நடிகர் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு என்கின்ற முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்து, கிராமங்கள் தோறும் ரசிகர் மாற்ற பலகை வைக்கும் அளவுக்கு, நடித்த முதல் படத்திலே பிரசாத்துக்கு ரசிகர் பட்டாளம் உருவாகியது. அந்த வகையில் நடிகர் விஜய் – அஜித் இருவரும் தங்களுடைய சினிமா ஆரம்ப காலகட்டத்தில் பல படங்கள் நடித்து போராடி ஒரு அந்தஸ்தை அடைவதற்கு சில காலங்கள் ஆனது.
ஆனால் நடிகர் பிரசாந்த் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார் . இப்படி அவர் முன்னணி நடிகராக மிகப்பெரிய உச்சத்தில் பிரசாந்த் இருந்த காலகட்டத்தில் அவருடன் கால் சீட் வாங்குவதற்கு இயக்குனர்கள் பெரும் பாடுபட்டார்கள். அப்படித்தான் சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தை பிரசாந்த் நடிப்பதற்காக பலமுறை பிரசாந்தை சங்கர் அணுகியும் பிரசாந்தின் கால் சீட் சங்கருக்கு கிடைக்கவில்லை.
இதன் பின்பே பிரபுதேவாவை வைத்து காதலன் என்கின்ற படத்தை சங்கர் எடுத்தார். காதலன் மிகப்பெரிய ஹிட் அடித்ததும் பிரபுதேவா தொடர்ந்து ஹீரோவாக பல படங்களை நடித்து மிகப்பெரிய உயரத்திற்கு வந்தார். அந்த வகையில் இன்று பிரபுதேவா மிகப்பெரிய ஹீரோவாக ஒரு நடிகராக உச்சத்தில் உள்ளார் என்றால் அன்று காதலன் படத்தில் பிரசாந்த் நடிக்காமல் போனதால் பிரபுதேவாவுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு தான் என்றும் சொல்லலாம்.
அதே போன்று ஒரு இளம் இயக்குனராக ஏ ஆர் முருகதாஸ் முதல் படம் இயக்குவதற்காக தீனா படத்தின் கதையை கையில் வைத்து நடிகர் பிரசாந்தின் தந்தையை சந்தித்த முருகதாஸ் கதையை பிரசாந்தின் தந்தையிடம் தெரிவித்து இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் இந்த படத்தில் பிரசாந்த் சார் கால் சீட் வேண்டும் என முருகதாஸ் கேட்க, அந்த காலகட்டத்தில் பிரசாந்த் ரொம்ப பிஸியாக நடித்து வந்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஒரு பத்து நாள் பொறுங்க, பிரசாந்த் ஃப்ரீ ஆனதும் கதையை பிரசாந்திடம் தெரிவிக்கிறேன் என பிரசாந்தின் தந்தை முருகதாஸிடம் காத்திருக்க சொல்ல, அதற்கு முருகதாஸ் அஜித்திடம் கதையைச் சொல்லி சம்மதமும் வாங்கி விட்டார், இதே மாதிரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தபுவுக்கு ஜோடியாக நடித்த அஜித் கதாபாத்திரத்தில் பிரசாந்தை கேட்டார்கள்.ஆனால் அதற்கும் பிரசாந்த் தரப்பில் சம்மதம் தெரிவிக்காததால் அந்த படமும் பிரசாந்துக்கு மிஸ் ஆனது.
இந்த நிலையில் கஸ்தூரிராஜா மிகப்பெரிய ஒரு இக்கட்டான ஒரு சூழலில் இருக்க தன்னுடைய மகன் செல்வராகவனை இயக்குனராக வைத்து துள்ளுவதோ இளமை என்கின்ற படத்தை எடுக்க முடிவு செய்கிறார் இந்த படத்தில் நடிக்க பிரசாந்திடம் கதையைச் சொல்ல செல்வராகவனை அனுப்பி வைக்கிறார். பிரசாந்திடம் கதையைச் சொல்ல பிரசாந்த் இந்த கதை பள்ளிக்கூடத்தில் படிக்கிற மாணவன் கதை.
அதனால் எனக்கு செட்டாகாது நீங்க சின்ன வயசு ஒரு பையன தேடி இந்த படத்துல நடிக்க வைத்தால் அது மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என செல்வராகவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளார் பிரசாந்த்.இதன் பின்பே பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனுஷை அழைத்து நடிகர்கள் கிடைக்காததால் நடிக்க வைத்தனர் செல்வராகவும் கஸ்தூரிராஜாவும். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து அடுத்தடுத்து முழு நேர நடிகராக உருவெடுத்த தனுஷ் இன்று மிகப்பெரிய நடிகராக உள்ளார்.
அந்த வகையில் அஜித்துக்கு தீனா என்கின்ற ஒரு படம் திருப்புமுனையாக அமைவதற்கும் பிரபுதேவா இன்று நடிகராக உயர்வதற்கு காதலன் என்கின்ற படம் மிகப்பெரிய முக்கிய காரணம், அதே போன்று துள்ளுவதோ என்கின்ற படத்தில் பிரசாந்த் நடிக்க மறுக்க, அதில் நடித்த தனுஷ் இன்று மிகப்பெரிய நடிகராக உருவெடுக்க இப்படி இந்த நடிகர்கள் எல்லாம் மிகப்பெரிய உயரத்திற்கு வருவதற்கு பிரசாந்த் ஒரு வகையில் காரணம் தானே.