கடைசி வரை தொடரும் ட்விஸ்ட் … பிரசாந்த் நடித்த அந்தகன் படம் வேற லெவல் மாஸ்…

0
Follow on Google News

90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகனாக வலம் வந்த டாப் ஸ்டார் பிரசாந்த், சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியில், 2018ம் ஆண்டு வெளியான அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் மூலம் பிரஷாந்த்க்கு நல்லதொரு கம்பேக் கிடைக்கும் என நம்பி, அவருடைய அப்பா பக்காவாக தமிழில் அந்தகன் என்று இந்த படத்தை இயக்கினார்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த நிலையில், இதன் கதை என்னவென்றும், அதுவும் இந்த படம் முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா என பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. இந்த படத்தில், கண் தெரியாத நபராக நடித்து அனுதாபத்தை பெற்று, எப்படியாவது லண்டனுக்கு சென்று பியானோ கலைஞராக மாற வேண்டும் என நினைக்கும் பிரசாந்துக்கு, ஒரு விபத்து மூலம் பிரியா ஆனந்த் தோழியாக மாறுகிறார்.

அவருடைய பாரில் பிரசாந்த் பியானோ வாசிக்க, நவரச நாயகனாகவே படத்தில் வரும் நடிகர் கார்த்திக், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரசாந்தை இசையமைக்க வீட்டுக்கு வரச் சொல்கிறார். அப்போது கார்த்திக்கின் வீட்டுக்குச் செல்லும் பிரசாந்துக்கு அங்கே சிம்ரன் மற்றும் போலீஸ் அதிகாரியான சமுத்திரகனியால் கார்த்திக் கொல்லப்பட்டுக் கிடப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.

இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்க நினைத்து காவல் நிலையம் சென்றால், அங்கே இன்ஸ்பெக்டராக சமுத்திரகனி இருக்க, பிரசாந்துக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. மேலும் இதில் பிரசாந்துக்கு கண் தெரியுமா? தெரியாதா? என சமுத்திரகனியும் சிம்ரனும் சோதனை செய்கின்றனர். பிரசாந்துக்கு உண்மையிலேயே கண் தெரியாமல் போகும் வேலையை சிம்ரன் பார்த்து விடுகிறார்.

கண் தெரியாமல் போகும் பிரசாந்த் கிட்னி திருடும் கும்பலாக வரும் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி மற்றும் யோகி பாபுவிடம் மாட்டிக்கொள்ள, கடைசியில் அந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பித்தார். சிம்ரனை பழி வாங்கினாரா? லண்டனுக்கு சென்றாரா? அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்ததா? என ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் படம் பரபரப்பாக உள்ளது.இந்நிலையில், அந்தகன் படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி, சினிமா விமர்சகர்கள் வரையென பலரும், இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஏனெனில் இந்த படத்தில் நிறைய டிவிஷ்டுகள் இருக்கிறது என்றும், மேலும் படம் எந்த இடத்திலும் போர் அடிக்காமல் மிகவும் சுவாரசியமாக செல்வதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் தியாகராஜன் இந்த படத்தை பக்காவாக இயக்கி இருக்கிறார் என்றும் பாராட்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் பிரசாந்துக்கு இதுதான் மிகப்பெரிய கம்பேக் என்றும்,

அதோடு இந்தப் படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூபாய் 65 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அளவில் மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தியன், ராயன் போன்ற படங்களை தூக்கி சாப்பிட்டு விட்டது நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தகன் திரைப்படம், அந்த அளவுக்கு மக்கள் கொண்டாடும் படமாக அந்தகன் அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.