இந்தியாவின் பெருமையை கிண்டல் செய்வதா.? அடித்த அடியில் அந்தர் பல்ட்டி அடித்த பிரகாஷ் ராஜ்..

0
Follow on Google News

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான
இஸ்ரோ கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தாலும் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது.

இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்நிலையில் தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ விண்ணில் செலுத்தி தற்பொழுது வெற்றிகரமாக நிலவில் இறங்க்கியுள்ளது. இந்த சாதனையை இந்தியாவே கொண்டாடி வரும் நிலையில், நிலவில் தரை இறங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திராயன் 3 நிலவில் உள்ள புகைப்படங்களை எடுத்து அனுப்பியதை இஸ்ரோ வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சில தினங்களுக்கு முன்பு அவருடை சமூக வலைத்தள பக்கத்தில் சந்திரயான்-3 குறித்து ஒரு பதிவு செய்திருந்தார், அதில், ‘‘வாவ், நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் ‘‘வாவ், முதல் புகைப்படம்” என குறிப்பிட்டு ‘ஒருவர் தேநீர் ஆற்றும்’ புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் அவர் மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்வதாக பலரும் பிரகாஷ் ராஜுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்.

பிரகாஷ் ராஜ் பதிவுக்கு பலரும் கொந்தளித்து போய் கடுமையாக பிரகாஷ்ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அதில் சிலர், சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை. அரசியல் நோக்கத்தில் அவமரியாதை இந்தியாவிற்கான செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தும் செயல் என மிக கடுமையாக பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஹனுமன் சேனா அமைப்பின் நிர்வாகி பிரமோத், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பனஹட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ் ராஜ் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு எதிராக கிளம்பிய கடும் எதிர்ப்புக்கு விளக்கம் கொடுத்த பிரகாஷ் ராஜ்.

‘வெறுப்பை விதைப்பவர்களுக்கு எல்லாமே வெறுப்பாகவே தெரிகிறது. நான் கேரளாவை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின் கார்ட்டூனை பதிவிட்டு இருந்தேன். ஒரு நகைச்சுவை காட்சியை பகிர்ந்தால் அதை தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். பாஜகவினரும் இந்து அமைப்பினரும் நகைச் சுவையை நகைச்சுவையாக கடந்து செல்ல பழக வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார்.

இருந்தும் நெட்டிசன்களும் வலைதளவாசிகளும் பிரகாஷ் ராஜை விடுவதாக இல்லை, தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிலவில் சந்திராயன் 3 தடம் பதித்ததும், பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்து இருந்தார், அதில், ‘இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் மிகவும் பெருமையாக தருணம் இதை சாத்தியமாக்கிய ISRO சந்திராயன்3, விக்ரம் லேண்டர் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி.

நமது பிரபஞ்சத்தின் அனைவருக்கும் ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் இது நமக்கு வழிகாட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவிற்கு, பலரும் யோவ் நடிக்காத உனக்கும் இந்த நிகழ்வு வருத்தமாக தான் இருக்கும் இருந்தாலும் நாட்டு பற்று உள்ளது போன்று வாழ்த்து தெரிவித்து நடிக்க வேண்டாம் என பலரும் பிரகாஷ் ராஜை திட்டி தீர்த்து கமெண்ட் செய்து வருவது குறிப்பிடதக்கது.